Viral Video: செல்லப் பிராணிக்கு வளைகாப்பு! இது சீர்காழியின் நாய்க்குட்டி சீமாந்தம்
குடும்பத்தில் ஒருத்தியாக இருக்கும் செல்லக்குட்டிக்கு வளைகாப்பு செய்து அசத்திய குடும்பம்... இது சீர்காழியின் நாய்க்குட்டி சீமாந்தம்
சீர்காழி: வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குட்டிக்கு சீமந்தம் செய்து அழகு பார்த்த அம்மாவின் பாசம் அனைவரையும் நெகிழ வைக்கிறது.
சீர்காழியில் மகன்கள் தூக்கி வந்து வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் செய்து வைத்த குடும்பத்தினரை அனைவரும் பாராட்டுகின்றனர். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இந்த வளைகாப்புக்கு திரளாக வந்து கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதீனா நகரை சேர்ந்த தம்பதியரின் மகன்களான நிதீஷ் குமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் தங்களது உறவினர் வீட்டிலிருந்து நாய்க்குட்டி ஒன்று தூக்கிவந்து வளர்த்து வந்தனர்.
வீட்டில் வளர்த்து பராமரித்து வந்த நாய்க்கு, சிறுவர்கள் சுக்கி என பெயரிட்டனர். அந்த நாய்க்குட்டி குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக மாறியது.
வீட்டில் அனைவரிடமும் பாசமுடன் பழகிய நாய்க்குட்டி சிக்கி கருவுற்று இருந்தது அதனை அறிந்த வீட்டிலிருந்த அனைவரும் நாய்க்குட்டிக்கு வளைகாப்பு செய்ய முடிவு செய்தனர்.
மேலும் படிக்க | நண்பனின் திருமணத்துக்கு இப்படி ஒரு சீர் வரிசையா? ஆச்சர்யப்படுத்தும் வீடியோ!
அதன்படி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சீமந்த அழைப்பையும் கொடுத்தனர். தங்கள் வீட்டில் நாய்க்குட்டி வளைகாப்பு செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு நாய்க்குட்டி சந்தனம்,மஞ்சள்,குங்குமம் இட்டு மகிழ்ச்சியுடன் நாய்க்குட்டிக்கு வளைகாப்பு சடங்கை செய்துக் கொண்டாடினர்.
மேலும் படிக்க | சவாலுக்கு தயாரா! மானை குறிவைக்கும் விலங்கை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR