அமெரிக்க பிரதமராக ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜன., 20-ம் தேதி பதவியேற்றார். இந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் எடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் தடைவிதித்தது, வடகொரியாவுடன் வார்த்தை மோதல், ஹெச்.1பி விசா கட்டுப்பாடுகள், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது என ட்ரம்ப் எடுத்த முடிவுகள் ஒவ்வொன்றும் அதிரடியாகத் தான் எடுத்தார். 


இந்நிலையில், அமெரிக்க அதிபராக ட்ரம்பின் ஓராண்டு செயல்பாடுகள் எப்படி என அமெரிக்காவைச் சேர்ந்த குட்டிக் குழந்தைகளிடம் ஏ.பி.சி என்ற சேனல் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது. அவர்கள் குழந்தைகளிடம் ருசிகரமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்களின் செயலும் கருத்தும் ரசிக்க தக்க வகையில் கூறியுள்ளனர். 


இந்த பேட்டியில் வரும் ஒரு சிறுமி, ட்ரம்ப்பின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும் குறிப்பாக, அவர் மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டப் போவதாக அறிவித்திருப்பது பிடிக்காத விஷயம் என்று தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் மோதலை கடைப்பிடிப்பதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று இன்னொரு சிறுவன் கூறுகிறான். 


ஒருசில குழந்தைகள், ட்ரம்பின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். உங்களுக்கு ட்ரம்ப் என்றால் முதலில் நினைவுக்கு வருவது எது என்ற கேள்விக்கு, அவருடைய  விரல்களும் ஆரஞ்சு நிற முகமும் நினைவுக்கு வரும் என்று ஒரு சிறுவன் கூறுகின்றான். வீடியோவில் பேசும் குழந்தைகளின் அவர்கள் அளிக்கும் பதிலும் முகபாவனைகளும் ரசிக்கும்படி உள்ளன. தற்போது இந்த வீடியோ வலைதளங்களில் வீடியோ வைரலாகப் பரவிவருகிறது.



Video Courtesy : ABC NEWS