திருவள்ளூர்: ஜூலை 8 ம் தேதி கடல் அரிப்புகளை ஆய்வு செய்வதற்காக இன்று (வியாழக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேர்காடு பகுதிக்கு வருகை தந்த தமிழக மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை மீனவ மக்கள் கரைக்கு தூக்கி கொண்டு சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது வெள்ளை காலணிகள் ஈரமாகாமல் இருக்கவும், கணுக்கால் அளவுக்கு தண்ணீர் இருந்தால், படகில் இருந்து அமைச்சர் இறங்கியதும் அவரை சில மீனவர்கள் கரை வரைக்கும் தோளில் சுமந்தபடி தூக்கி சென்றுள்ளனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து முன்னால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "வெட்கக் கேடு" எனக் கூறியுள்ளார். 


அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சர்ச்சை வீடியோவை பகிர்ந்து "பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம்.. கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா? மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு..." எனப் பதிவிட்டுள்ளார். 


இந்த சம்பவம் சர்ச்சையானதை அடுத்து,  அதற்கு பதிலளித்த அமைச்சர், மீனவ மக்கள் அன்பு மிகுதியால் என்னை தூக்கிச் சென்றனர். என்னை தூக்கி செல்லுமாறு நான் ஒருபோதும் கேட்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 


பழவேற்காடு பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் என்ற செய்தியை அறிந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்ய சென்றார். மீனவர்களும் துறை அதிகாரிகளுடன் படகில் ஏறி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதபிறகு அதன்பிறகு கரைக்கு திரும்பிய போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 


சமூக நீதி பேசும் திமுக அமைச்சர் ஒருவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பட்டது. ஆனால் அதற்கு தகுந்த விளக்கத்தை திமுக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அளித்துள்ளார். 


68 வயதான அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார். 2010 இடைத்தேர்தல், 2011, 2016, 2021 ஆகிய நான்கு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR