இணைய உலகில், சமூக ஊடகங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளித் தருவதில் வல்லவை.  சமூக ஊடகத்தில் பகிரப்படும் எண்ணிலடங்காத வீடியோக்கள் நம்மை பல சமயங்களில் வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன அல்லது பயத்தில் உறைய வைத்து விடுகின்றன.  அதிலும் பாம்பு வீடியோக்கள் மிகவும்  எளிதில் வைரலாகும். பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விரும்பி பார்க்கப்படுகின்றன. நிஜமாக நம் கண்முன்னால் ஒரு பாம்பு வந்தால், சப்த நாடியும் ஒடுங்கித் தான் போகும். அதனால் தான் பாம்பு என்றால் படையே நடுங்கும் என கூறினார்கள். அதனால் தானோ என்னவோ, பாம்பு வீடியோக்களை மக்கள் அதிகம் பார்க்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், மலைப்பாம்பை பிடிக்கும் தந்திரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ட்விட்டர் கணக்கு ஒன்றில் பகிரப்பட்ட நிலையில்,  வரை 5.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. உண்மையில், மலைப்பாம்பை பிடிப்பது மிகவும் கடினமான மற்றும் உயிருக்கு ஆபத்தான பணியாகும். ஆனால் ஒரு நபர் இந்த ராட்சத பாம்பை , தனது தந்திரமான செய்கையினால், தனது வலையில் சிக்க வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த நபர் ஒரு பிளாஸ்டிக் குழாய், சில குச்சிகள், கயிறு மற்றும் உயிருள்ள கோழியை மட்டுமே பயன்படுத்தி மலைப்பாம்பை பிடித்துள்ளார். மலைப்பாம்பை பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:




உயிருள்ள கோழி ஒன்று சேற்றில் நிற்க வைக்கப்பட்டுள்ளதை இந்த வீடியோவில் காணலாம். அருகில் சேற்று நீர் உள்ளது, அதில் சில குச்சிகளை நட்டுசுவர் போல் எழுப்பப்பட்டுள்ளது. இதனுடன், சேவல் மற்றும் தண்ணீருக்கு இடையே நீல நிற குழாயும் பொருத்தப்பட்டுள்ளது, அதில் இருந்து ஒரு கயிறு கட்டப்பட்டு, சேவல் பின்னால் உள்ள பெரிய குச்சியில் கட்டப்பட்டுள்ளது. கோழியை நோக்கி வேகமாக நகரும் மலைப்பாம்பு குழாயினுள் நுழையும்போது, ​​ சிக்கி பிடிபடுகிறது. பொறியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மலைப்பாம்பு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது ஆனால் தோல்வியடைகிறது.


மேலும் படிக்க | அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ