Viral Video: பறந்து சென்று பறவையை வேட்டையாடிய மீன்
மீன் ஒன்று கடலுக்குள் தாழ்வாக பறக்கும் பறவையை தாவி வேட்டையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இணையத்தில் பதிவிடப்படும் ஆயிரக்கணக்கான வீடியோக்களில் அன்றாடம் ஏதேனும் ஒரு சில வீடியோ மட்டுமே நெட்டிசன்களின் ஏகோபித்த வரவேற்பை பெறும். பதிவிட்டப்படும் அனைத்து வீடியோக்களும் வைரலாவது இல்லை. இதற்கு காரணம், அந்த வீடியோவில் ஒரு உண்மை தன்மை, நெட்டிசன்களை ஈர்க்கும் விஷயம் என ஏதாவது இருக்க வேண்டும். அப்படி, இணையவாசிகளை வெகுவாக கவர்ந்த வீடியோ ஒன்றை இங்கே பார்க்கலாம்.
கடல் பகுதியில் எண்ணற்ற பொக்கிஷங்கள் இருக்கும் அதே வேளையில், அன்றாடம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அற்புதங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்தவகையில், மீனை வேட்டையாடும் பறவைகளின் வீடியோவை பார்த்திருப்போம். ஆனால், பறவையை மீன் வேட்டையாடும் வீடியோவை பார்த்திருக்கிறீர்களா?. அரிதாக மட்டுமே நடைபெறும் இத்தகைய காட்சிகள் காணக் கிடைக்காதவை. கடல் பகுதி ஒன்றில் ஒரு பறவை தாழ்வாக பறந்து சென்று கொண்டிருக்கிறது. அதனை நீருக்குள் இருந்தவாறே உன்னிப்பாக கவனிக்கிறது மீன். நேரம் வரும் வரை பொறுமையாக இருக்கிறது.
பறவைக்கோ, தனக்கு நீருக்குள் ஆபத்து இருக்கிறது என்பது தெரியவில்லை. மாறாக, தனக்கான மீனைப் பிடிக்க தாழ்வாக செல்கிறது. அதனுடைய நேரம், அதுவே இரையாக மாட்டிக் கொள்கிறது. நீருக்குள் இருக்கும் மீன், பறவை தாழ்வாக வருவதை அறிந்து, நொடிப்பொழுதில் நீருக்குள் இருந்து மேலே தாவுகிறது. சொல்லப்போனால் பறவையைப் போல் பறந்து வந்து பறவையைப் பிடித்துக் கொண்டு வழக்கம்போல் ஆழத்துக்கு சென்றுவிடுகிறது. இத்தகைய கண்கொள்ளாக் காட்சி காண்போரை வியக்கவைத்துள்ளது.
மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்
மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata