அண்மைக்காலமாகவே மனிதர்கள் வனவிலங்குகள் மோதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. யானை முதல் சிறுத்தை புலி மற்றும் கரடி வரை மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழைவதும், அப்போது கண்ணில் படுவோரை தாக்குவதும் தொடர் கதையாகிவிட்டது. உணவுக்காக, தண்ணீருக்காக மனிதர் வாழ்விடங்களுக்குள் புகுவது காலம்காலமாக இருந்தாலும், வயல்வெளிகள் ஆகியவற்றை சேதபடுத்தி வந்த வனவிலங்குகள் இப்போது வீடுகள் மற்றும் ஹோட்டல்களுக்குள் புகுந்து மனிதர்கள் சாப்பிடும் உணவுகளை சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டன. இது ஆபத்தான ஒன்றாக வன விலங்கு உயிரி ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விளையாட்டு வீரங்களுக்கு கழிவறையில் உணவு! சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ


இதுமட்டுமில்லாமல், வனப்பகுதிகளுக்குள் இருக்கும் நெடுஞ்சாலைகளும் மனிதர்கள் வனவிலங்கு மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வனப்பகுதி வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் மனதர்கள் மீதான வனவிலங்குகள் தாக்குதல் நடைபெறுவதும் வாடிக்கையாகி வருகிறது. அண்மையில் டேராடூன் ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அப்படியான மோதல் ஒன்று நடைபெற்றுஇருக்கிறது. சைக்கிளில் ஒருவர் செல்லும்போது, சாலை ஓரத்தில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து அந்த நபரை தாக்குகிறது. 



இந்த சம்பவத்தின்போது பின்னால் ஒரு கார் வேகமாக வருகிறது. நல்வாய்ப்பாக சிறுத்தையின் தாக்குதலில் இருந்து அந்த நபர் தப்பித்துவிட்டார். சிறுதையும் வனப்பகுதிக்குள் ஓடிவிடுகிறது. இந்த சம்பவம் அப்படியே சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. பதைபதைக்க வைக்கும் இந்த காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வனப்பகுதி வழியே பயணிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்த செய்கிறது.  


மேலும் படிக்க | Viral Video: சூப்பர் மார்கெட்டில் ஷாப்பிங் செய்த கரடி; கடைக்குள் புகுந்து அட்டகாசம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ