படை ஒன்றை நடுங்க வைக்கும் அளவுக்கு பாம்பு மீதான அச்சம் இருக்கிறது. போகிற போக்கில் ஒரு பாம்பை பார்த்துவிட்டால் தெறித்து ஓடுபவர்கள் தான் இங்கு அதிகம். அது இருக்கும் திசை தெரிந்தாலே அந்தப்பக்கம் செல்லாமல் வேறு பக்கம் ரூட்டை மாற்றிவிடுவார்கள் மக்கள். அந்தளவுக்கு சமூகத்தில் பாம்பின் மீது பயம் புரையோடிக் கிடக்கிறது. காரணம், அது தீண்டிவிட்டால் உடனடியாக உயிர் போய்விடும் என்கிற அச்சம். நவநாகரீக உலகில் பாம்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டாலும், அதனை நேரடியாக பார்க்கும்போது ஏற்படுகிற பயம் என்பது இன்னும் அகலவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மடியில் குழந்தை போல் விளையாடும் மலைப்பாம்பு: வீடியோ வைரல்


காடு அழிப்பு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு படையெடுக்கும் வனவிலங்குகளில் பாம்பு ஒன்று. இருப்பிட அழிப்பு காரணமாக மக்கள் வாழ்விடங்களில் அதிகம் தஞ்சம் புகுந்து கொள்கிறது. இதனால் மனித உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. ஏனென்றால், மிகவும் அமைதியாக இருக்கும் பாம்பு, அருகில் செல்பவர்களை தன்னை தாக்க வருகிறார்கள் என நினைத்து நொடியும் தாமதிக்காமல் முன்கூட்டியே தாக்க தொடங்கிவிடும். சில நேரங்களில் பாம்பு கடியை அறிந்து கொள்ளக்கூட முடியாது. அந்தளவுக்கு மிகவும் லேசாக இருக்கும். இதனால், காடுகளை ஓட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



இல்லையென்றால் அவற்றின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடியாது. இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவும் வனபகுதியை ஒட்டியிருக்கும் வீடு ஒன்றில் எடுக்கப்பட்டது தான். அதில் காட்டில் இருந்து வந்த பாம்பு, வீட்டின் கதவில் ஏறிக்கொண்டு செக்யூரிட்டியாக இருக்கிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோர் தெறித்து ஓடி, வீட்டுக்கு வெளியே சற்று தொலைவில் நின்று கொண்டனர். அங்கிருந்த ஒருவர், வீட்டுக்கு செக்யூரிட்டியாக வந்த நாகம்பாம்பை வீடியோவாக பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்ப்பவர்கள் கூட தங்கள் வீடுகளில் பாம்பு வந்ததுபோல் பயம் ஏற்படுவதாக கமெண்ட் அடித்துள்ளனர்.


மேலும் படிக்க | 90's கிட்ஸ்க்கு டப் கொடுக்கும் நாய்! ஜோடியாக ஊஞ்சலாடும் வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ