இந்திய கிரிக்கெட் அணியின் பரபரப்பான வீரரான விஜய் சங்கர் தனது மைக்ரோ பிளாக்கிங் கைப்பிடியில் தனது உடல் மாற்றம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதை அடுத்து ட்விட்டரில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜூலை மாதம் நடைப்பெற்ற கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் போது, பயிற்சி அமர்வில் தனது கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமா விஜய் ஷங்கர் தொடரில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து 28 வயது இளம் வீரரால் இதுவரை தேசிய அணியில் இடம்பிடிக்க இயலவில்லை.


இந்நிலையில் விஜய் ஷங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் “வியர்வை, நேரம், பக்தி. அது பலனளிக்கிறது!” என்ற தலைப்பில் தனது உடல் மாற்றம் தொடர்பான புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டார். 



இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரது கிரிக்கெட் கனவை அவர் கைவிட்டதாக குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். கிரிக்கெட் தவிர மற்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவதை காட்டிலும், கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி மீண்டும் அணியில் இடம் பிடிக்குமாறும் சிலர் அறிவுறுத்தியுள்ளனர்.


இதுகுறித்து ட்விட்டர் பயனர் ஒருவர் குறிப்பிடுகையில்., "நல்ல மாற்றம் தான், ஆனால் தேசிய அணியில் உங்கள் இடத்தை நீங்கள் இழந்து விட்டீரே... உங்களது வரும் முயற்சி அணிக்கு திரும்புவதற்கான முயற்சியாக இருக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.



மற்றொரு நபர் குறிப்பிடுகையில்., "எங்கே நண்பரே இருக்கின்றீர்.. செவ்வாய் கிரகத்திலா?" என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.