விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடிக்கும் "ஸ்கெட்ச்" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடசென்னையை மையமாக கொண்டு கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடித்துள்ளனர்.


இத்திரைப்படத்தினை கலைப்புலி எஸ். தாணு-வின் வி_கிரியேசன்ஸ் மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரிக்கின்றனர். எஸ்.எஸ்.தமன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். 


முன்னதாக இத்திரைப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்தாண்டு ஜனவரி மாதம் இப்படம் வெளியாகும் என குறிப்பிட்டிருந்த நிலையில், பொங்கள் பண்டிகைக்கு வெளியாக வாய்புள்ளதாக விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் இன்று படக்குழுவினர், படத்தின் வெளியீட்டு தேதி குறித்து ப்ரோமோ வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்!