பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாகித் கிசார் சிங்கங்களை செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார். அவர் அடிக்கடி சிங்கங்களுடன் விளையாடும் வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஜாகித் கிசார் செல்லமாக வளர்க்கும் சிங்கங்களுக்கு பயிற்சியும் அளிக்கிறார். மேலும், தனது நண்பர்களையும் அழைத்து வந்து சிங்கங்களுடன் விளையாட அனுமதிக்கிறார். அப்படி ஒருவரை அழைத்து வந்து விளையாட அனுமதிக்கும்போதுதான் விபரீதம் ஏற்படுகிறது. புதிதாக தங்கள் கூண்டுக்குள் ஒருவர் இருப்பதை பார்த்த சிங்கங்கள் இரண்டும் அவரை தாக்க முற்பட்டு சுற்றி வளைக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: முதல் முதலாக தண்ணீரை கண்டு குதூகலிக்கும் குட்டி யானை!


அவர் தப்பித்து ஓடுவதற்கு முயற்சிக்கும்போது சிங்கங்கள் தாக்குகின்றன. உடனே பயத்தில் சரிந்து கீழே விழும் நபர் என்ன செய்வதென அவருக்கு தெரியவில்லை. அந்த நொடி சிங்கங்களின் தாக்குலில் இருந்து உயிர் தப்பிப்போமா? என்ற எண்ணம் கூட அவருக்கு எழுந்திருக்கும். பார்க்கும் நம்மை போன்ற பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஏற்படும். ஏனென்றால், சிங்கங்கள் அவ்வளவு ஆக்ரோஷமாக அவரை தாக்குகின்றன. அந்த நேரத்தில் அந்த நபரின் நண்பர் வந்து சிங்கங்களை விரட்ட தாக்குதலில் இருந்து தப்பிக்கிறார். இந்த வீடியோ இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகியிருக்கிறது.   



ஜாகித் கிசார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களை இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கிறார். அவ்வப்போது இதுபோன்ற திடுக்கிடும் வீடியோக்களை பதிவிடுவது தான் அவருடைய வழக்கம். அதேநேரத்தில் அவர் சிங்கங்கள் இப்படி வளர்ப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்த வீடியோவுக்கும் கருத்துபதிவிட்டவர்களில் சிலர் முட்டாள்தனமான வீடியோவாக இருக்கிறது. சிங்கங்களை எப்படி வளர்க்கலாம்? அப்படி வளர்த்தாலும் இப்படி சிங்கங்கள் அருகே சென்று விளையாடலாமா? அனுபவம் இல்லாதவர்களை அதனருகில் அனுமதிப்பது எந்த மாதிரியான அணுகுமுறை? என்றெல்லாம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் சிங்கங்களையெல்லாம் ஒரு கூண்டுக்குள் அடைத்து வைக்காதீர்கள். அதனை சுதந்திரமாக இருக்க வனப்பகுதியில் விளையாட அனுமதியுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். 


மேலும் படிக்க | Viral Video: கதையல்ல நிஜம்... பாட்டிலில் கல்லை போட்டு தாகத்தை தீர்த்துக் கொண்ட காகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ