வெயில் காலத்தில் எலுமிச்சையின் விலை உச்சம் தொட்டுள்ளது.  வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அதே வேகத்தில் எலுமிச்சையின் விலையும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த விலைவாசி உயர்வால், சமூக வலைதளங்களில் எலுமிச்சம்பழம் பற்றித் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பான பல மீம்ஸ்கள் வைரலாகியும் வருகின்றன. அதில் மிகவும் வேடிக்கையான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எகண் திருஷ்டிக்காக எலுமிச்சம்பழம் மற்றும் பச்சை மிளகாயைத் கோர்த்து தொங்கவிடுவதை நீங்கள் வாகனங்களில் மற்றும் பிற இடங்களில் பார்த்திருக்க கூடும்.


ஆனால் இப்போது விலைகள் மிகவும் அதிகரித்துவிட்ட நிலையில், என்ன செய்ய வேண்டும்? மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும். இதை மனதில் வைத்து ஒருவர், எலுமிச்சைக்கு பதிலாக பூண்டு மற்றும் மிளகாயை தொங்கவிட்டுள்ள காட்சி மிகவும் வைரலாகி வருகிறது. எலுமிச்சம்பழத்திற்கு பதிலாக பூண்டு பயன்படுத்துவது தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.


மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 




ஐபிஎஸ் அதிகாரி படத்தைப் பகிர்ந்துள்ளார்



இந்த வேடிக்கையான புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார். இதனுடன் வேடிக்கையான தலைப்பையும் கொடுத்துள்ளார். அவரது தலைப்பில், 'பணவீக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எலுமிச்சை இல்லாததால் பூண்டு டெப்யூடேஷனில் வைக்கப்பட்டது. பூண்டு இன்று இந்த வேலைக்கு பொறுப்பேற்றுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியின் இந்த பதிவை மக்கள் மிகவும் ரசித்து ஷேர் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த பதிவில் வேடிக்கையான கருத்துக்களையும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா... குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!


மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR