தில்லிக்கு அருகில் உள்ள பரிதாபாத்தில் உள்ள மிக உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் வியக்க வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதற்கு முன், சில நாட்களுக்கு முன்பு, பரிதாபாத்தில், 9வது மாடியில் விழுந்த புடவையை எடுக்க 10 வது மாடியில் இருந்து மகனை பெஷீட்டில் கட்டி இறக்கி விட்ட சம்பவம் வைரலாகிய நிலையில், அதே போன்ற அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோ கிரேட்டர் ஃபரிதாபாத் செக்டார்-82 பகுதியில் உள்ள கிராண்டேயூரா சொசைட்டியின் E-பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. 12வது மாடியின் பால்கனியில் ஒருவர் தொங்கி உடற்பயிற்சி செய்வது வீடியோவில் காணலாம்.


மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!


வைரல் வீடியோவை இங்கே காணலாம்:  



வைரல் வீடியோவில், சொசைட்டியின் கட்டிடத்தில் 12வது மாடியின் பால்கனியின் உள்ள இருப்பு கிரில்லை பிடித்துக் கொண்டு ஒருவர் பிடித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது போல் உள்ளது. ஆபத்தான ஸ்டண்டை எதிர்புறத்தில் உள்ள கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் படம் பிடித்ததாக தெரிகிறது. ஃபரிதாபாத்தின் செக்டார் 82ல் உள்ள குடியிருப்பில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்ததாக செய்தியில் கூறப்பட்டது.


கடந்த வாரம் தில்லி பரிதாபாத்தில் உள்ள செக்டார் 82ல் உள்ள குடியிருப்பு பகுதியில், நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரிதாபாத்தில் உள்ள குடியிருப்பில், 10 வது தளத்தில் இருந்து  பால்கனியில் ஒரு குழந்தை தொங்குவதைக் காணும் திகிலூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தை, அந்த குடியிருப்பின் எதிரில் வசிக்கும் ஒருவர் கேமராவில் படம் பிடித்துள்ளார். ஒன்பதாவது மாடியில் உள்ள பூட்டிய வீட்டின் பால்கனியில் விழுந்த தனது சேலையை எடுக்க தாய் தனது மகனை பெட்ஷீட்டால் கட்டி இறக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!


மேலும் படிக்க | அணைக்கட்டு மீது தனியாக நடக்கும் குழந்தை - பதைபதைக்க வைக்கும் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR