நீருக்குள் உயிருக்கு போராடிய காக்கை... காப்பாற்றிய கரடி: வைரல் வீடியோ
நீருக்குள் மூழ்கும் காக்கை ஒன்றை கரடி காப்பாற்றும் உணர்ச்சி மிக்க வீடியோ காண்போரை நெகிழ வைத்துள்ளது.
அன்பு என்பது மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆறாம் அறிவின் வெளிப்பாடு என்று நம்புகின்றனர். ஆனால் அது மனிதர்களை காட்டிலும் விலங்குகளிடம் தான் அதிகம் காணப்படுகிறது. வேட்டையாடும் விலங்குகள் எப்போதும் உயிர்களை கொல்லும் வேலையை மட்டும் தான் செய்யும் என்று நினைத்திருப்போம். அவை துடிக்கும் உயிர்களை காக்கும் என்று சொல்லும் சம்பவம் ஒன்று சிக்கியுள்ளது.
ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் உள்ள குளத்தில் மூழ்கியிருந்த காகத்தை கரடி ஒன்று காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு லைக் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | மானின் மாஸ் சண்டை, சிங்கம் வாங்கிய பல்பு: சினிமாவை மிஞ்சும் வைரல் வீடியோ
மிருக காட்சி சாலையில் வாலி என்ற ஒரு கரடி, குளத்தை ஒட்டிய பகுதியில் சாப்பிட்டு கொண்டே நடப்பதைக் காணலாம். இதற்கிடையில், ஒரு காகம் தண்ணீரில் மூழ்கும் நிலையில் அதன் இறக்கைகளை அடித்து கொண்டு, குளத்தில் மிதக்க முயற்சிக்கிறது. பறவை குளத்தில் இருந்து வெளியே வர கடினமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. இதை கவனித்த கரடி , வாலி குளத்தின் எல்லையை நோக்கி நகர்கிறது.
அதன் பிறகு காகத்தை அதன் பாதத்தால் பிடித்து அதன் வாயைப் பயன்படுத்தி பறவையின் இறக்கைகளைப் பிடிக்கிறது. சில நொடிகளில், கரடி காக்கையை வெளியே இழுத்து தரையில் கிடத்துகிறது. பின்னர் கரடி விலகிச் சென்று மீண்டும் சாப்பிடத் தொடங்கி விடுகிறது. தரையில் கிடந்த காகம் மீண்டும் தனது காலில் நிற்க முயற்சிக்கிறது. வேட்டையாடும் காட்டு விலங்குகள் நேயத்தோடு நடந்துகொள்ளும் இது போன்ற காட்சிகள் பார்ப்போரை நெகிழ வைக்கிறது. இந்த கிளிப் சுமார் 4.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ