பள்ளிக்கூடத்தில் மனப்பாடம் செய்வதெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த கலை. சிலருக்கு சுட்டுபோட்டாலும் மனப்பாடம் மனதில் நிற்காது. எப்படியாவது பாடங்களை மனப்பாடம் செய்து பரீட்சையில் பாஸாகிவிட வேண்டும் என குட்டிக்கரணம் அடித்தாலும், பரீட்சை எழுத ஆரம்பித்ததும் அனைத்தும் மறந்துவிடுவது சிலருக்கு விடுக்கப்பட்ட சாபமாகவே சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அனுபவம் பள்ளிப் படிப்பை முடித்த அனைவரும் எதிர்கொண்டிருப்பார்கள். சூப்பராக படித்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் எழுத தொடங்கும்போது தான் ஒன்றுமே ஞாபகத்துக்கு வராது. இது காமெடியான விஷயம் என்னவென்றால், மனப்பாடம் செய்யும்போது சிலர் செய்யும் வேடிக்கையான விஷயங்களை பார்ப்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காட்டாற்று வெள்ளத்தில் மீன்களை இரையாக்கும் கரடிகள்: வைரல் வீடியோ


சுட்டித்தனமான மாணவர்கள் தாங்கள் மனப்பாடம் செய்வதை வேடிக்கையாக செய்வார்கள். அவர்களுக்கு எல்லாம் குருவாக வந்திருக்கான் ஒரு சிறுவன். வீடியோவை பார்த்தால் நீங்களே அவனுடைய செய்கையில் வியந்துவிடுவீர்கள். ரோபோவை விட வேகமாக மனப்பாடம் செய்யும் வித்தையை கற்று வைத்திருக்கும் அந்த சிறுவன், முதன்முறையாக அதனை பொதுவெளியில் எல்லோருக்கும் தெரியும் வகையில் பயன்படுத்தும்போது யாரோ ஒருவர் எடுத்த வீடியோவில் சிக்கிவிட்டான். இந்த உலகமும் அந்த சிறுவனின் மனப்பாட மந்திரத்தை அப்படியே தெரிந்து கொண்டது. அந்த மந்திரம் என்னவென்பதை நீங்களே இங்கே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 



வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில், புத்தகத்தை திருப்பும் சிறுவன், அந்த பக்கத்தை தொட்டு தகவல்களை தலையில் ஏற்றிக் கொள்வதுபோல் செய்கை செய்கிறான். அடுத்தடுத்த பக்கங்களுக்கும் அதையே அவன் செய்கிறான். இந்த வீடியோவை பார்க்கும் பலரும், சிறுவனின் செய்கை பார்த்து கலகலப்பாக சிரிக்கின்றனர். டிவிட்டரில் மட்டும் ஏறத்தாழ 8 லட்சம் பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. ஒரு சிலர் தங்களுக்கு இந்த ஐடியோ வொர்க் அவுட்டாகவில்லை என கூறியிருப்பது தான் காமெடியின் உச்சம்.


மேலும் படிக்க | தண்ணீர் போல் ஓடும் நெருப்பை கையால் அள்ளும் அதிசய மனிதன்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ