பாம்புகளை பார்த்தவுடன் மக்களுக்கு முதலில் பயம் தான் வரும். அதனை அன்பாக எல்லாம் எண்ணமாட்டர்கள். ஆனால், பாம்புகளை பொறுத்தவரை அது ஆபத்து என்று உணர்ந்தால் தப்பிக்க மட்டுமே பார்க்கும். யாரையும் தாக்க வேண்டும் என்று நினைக்காது. தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே பாம்பு பிறரை தாக்கவோ அல்லது கொத்தவோ முற்படும். இந்த விஷயம் பொதுவாக மக்களுக்கு தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் வசிக்கும் இடங்களில் பாம்பு வந்துவிட்டால், அதனை அடித்து கொல்ல வேண்டும் என்று மட்டுமே நினைப்பார்கள். ஆனால், அது தவறு. பாம்புகளை பார்த்தால் அதனை பிடித்து பத்திரமாக வனப்பகுதிகளில் விட்டுவிட வேண்டும். இங்கு படைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு உயிரினமும் சூழலியல் சமத்துவத்துக்காக உள்ளவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் ஏற்படும் மாற்றங்கள் ஒட்டுமொத்த சூழலியலையும் பாதிக்கும். பாம்புகளை பார்த்தால் யாரும் அடிக்கக்கூடாது. உங்களால் பிடிக்க முடியவில்லை என்றால் உடனியாக அருகில் இருக்கும் தீயணைப்புத்துறை அல்லது நிபுணர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அரசு அலுவர்களுக்கு தகவல் கொடுத்தால் கூட அவர்கள் முறைப்படி பாம்புகளை பிடிக்க ஏற்பாடு செய்துவிடுவார்கள். நிபுணத்துவம் இல்லாமல் பாம்புகளை பிடிக்க முற்பட்டால் ஆபத்தில் கூட முடிய வாய்ப்புகள் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க பாம்புகளுக்கு மகிழ்ச்சியான பக்கம் ஒன்று இருக்கிறது.


மேலும் படிக்க | ஆத்தாடி..3 சிறுவர்களை விழுங்க முயற்சித்த நீர்யானை: ஷாக்கிங் வைரல் வீடியோ


அவை தன் ஜோடிகளுக்குள் அவ்வப்போது ஜாலியாக விளையாடும். இப்படியான காட்சிகள் எப்போதுதாவது கண்ணில் சிக்குவதுண்டு. சிலர் அதனை தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாக்களில் வெளியிடுவார்கள். அப்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோ தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியில் எடுக்கபட்டது. உளியாளம் கிராமத்தின் குடியிருப்பு வீடுகளுக்கு அருகே விளைநிலத்தில் சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டு இருந்தது.