உலகை கலக்கி வரும் கச்சா பாதாம் பாடல்; கண்ணமாவின் வைரல் டான்ஸ்
கச்சா பாதம் பாடலுக்கு பாரதி கண்ணமா சீரியல் புகழ் ரோஷினி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகின்றது.
சமீபமாக ஒரு பாட்டு வைரலாகி பெரும் ஹிட் ஆகி உள்ளது. அந்த பாடல் கச்சா பாதாம் ஆகும். யூ ட்யூப் தளத்துக்கு சென்றால் பல இளைஞர்களும் யுவதிகளும் இந்தப் பாட்டுக்கு ஆடும் காட்சியை நாம் பார்க்கலாம். பாடலின் மெட்டும் குரலும் ஒருவகை உள்ளார்ந்த ஈர்ப்பை நம் மக்களுக்கு கிளர்ந்தெழ வைத்திருக்கிறது.
இந்த பாடல் தற்போது உலக அளவில் பிரபலம் ஆகி உள்ளது. வட இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாம் விற்கும் வியாபாரி ஒருவர் இந்த கச்சாபாதம் பாடலை அறிமுகம் செய்துவைத்துள்ளார். இதையடுத்து, அவர் பாடிய இந்த பாடல் இணையத்தில் வைரலாகியதுடன் சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த வியாபாரியின் பாடல் வரியையே அடிப்படையாக கொண்டு கச்சா பாதம் என்ற ஆல்பம் சாங்கும் உருவாக்கப்பட்டு வெளியாகி மாபெரும் வைரலானது. இந்த பாடலை கிட்டத்தட்ட நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்து தற்போது வரை ரசித்துள்ளனர். அத்துடன் இந்த பாடலுக்கு பிரபலங்கள், டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடி வருகின்றனர்.
மேலும் படிக்க | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்!
இந்த நிலையில் தற்போது பாரதி கண்ணமா சீரியலில் நடித்து புகழ் பெற்ற ரோஷினி ஹரிப்ரியன் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் தற்போது கச்சா பாதம் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR