எம் புள்ளைய தொட்டுத்தான் பாரேன்! சவால் விட்டு சீறும் பாசக்கார பாம்பு! Viral Video!!
பாம்பை சீண்டினால் அது சீறும், ஆனால், அதன் முட்டைகளைத் தொட முயன்றால் என்ன செய்யும்? அதிர வைக்கும் அட்டகாச வீடியோ
Viral Video: சமூக ஊடகங்களில், பல வீடியோக்களைப் பார்க்கிறோம், அவற்றில் சில வைரலாகின்றன. வைரலாகும் வீடியோக்களில் வித்தியாசமான விஷயம் ஏதேனும் இருக்கும். அன்பைக் காட்டும் வீடியோக்கள் பெரும்பாலும் பலராலும் பார்க்கப்படுகின்றன. அதிலும் தாய்ப்பாசம் என்றால் கேட்கவே வேண்டாம்!
ஒரு தாய் தன் குழந்தைகளைப் பெற்றெடுப்பது மட்டுமல்லாமல், எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறாள். அதுமட்டுமின்றி, தன் குழந்தையை எல்லா வகையிலும் பாதுகாக்கிறாள். தன் குழந்தைக்காக யாருடனும் சண்டை போடலாம்.
தாய்ப்பாசம் என்பது உலகம் முழுவதும் காணக்கூடிய பிரத்யேகமான ஒன்று. ஆனால் அது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? என்று கேள்வி எழுப்பும் இந்த வீடியோ பாசக்கார பாம்புத் தாயின் உணச்சிப்பூர்வமான வீடியோ (Emotional Video). ஒரு தாய், தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை உணர்த்தும் பாச வீடியோ.
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பதை உணரலாம். இந்த ராட்சத பெண் மலைப்பாம்பு தனது முட்டைகளை பாதுகாக்கும் வீடியோ, பார்ப்பவரை பாச உணர்வில் மூழ்கடிக்கிறது. ஆனால், பாம்பின் பாசம் என்பதால் கொஞ்சம் பயமும் ஏற்படுகிறது.
jayprehistoricpets என்ற இன்ஸ்டாகிராமில் இந்த பாம்பு பாச வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவை பகிர்ந்த பயனர், அம்மா தனது முட்டைகளை பாதுகாக்க முடியும்' என எழுதப்பட்டுள்ளது. பெண் மலைப்பாம்பு தனது முட்டைகளை (Python Eggs) பாதுகாக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
தாய்ப் பாம்பின் அன்பிற்கு குவியும் பாராட்டுக்கள்
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவரும், பாம்பு அம்மாவின் அன்பையும் பாசத்தையும் பார்த்து வியந்து சல்யூட் அடிக்கின்றனர். ஒரு சிறிய தொட்டியில் பெண் மலைப்பாம்பு அமர்ந்திருப்பதை பார்க்கம். அதில் தாய்ப்பாம்பு, தான் இட்ட முட்டைகளுடன் இருக்கிறது.
ஒரு நபர் குச்சியால் முட்டைகளை தொட முயற்சிக்கும்போது, மலைப்பாம்பு ஆக்ரோஷமாகி அவரைத் தாக்குகிறது. பெண் மலைப்பாம்பு தனது முட்டைகளை நன்றாக பாதுகாப்பதை வீடியோவில் காணலாம்.
ALSO READ:Viral Video | பாம்பு Vs பல்லியின் உக்கிரமான சண்டையில் ஜெயித்தது யார்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR