Viral Video: ‘ஆள விடுங்கடா சாமி’ என அலறி ஓடும் நபர், அடக்கி ஊசி போட வைத்த நண்பர்கள்
பலர் ஊசி போட்டுக்கொள்ள பயந்து தடுப்பூசி மையங்களுக்கு செல்லாமல் தவிர்க்கிறார்கள். அப்படி, ஊசி போட்டுக்கொள்ள அஞ்சி நடுங்கும் ஒருவருடைய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Viral Video: இந்தியா முழுவதும் கோவிட் -19 தடுப்பூசி செயல்முறை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சிலர் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளாமல் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகிறார்கள்.
இதற்கிடையில், பலர் ஊசி போட்டுக்கொள்ள பயந்து தடுப்பூசி (Vaccination) மையங்களுக்கு செல்லாமல் தவிர்க்கிறார்கள். அப்படி, ஊசி போட்டுக்கொள்ள அஞ்சி நடுங்கும் ஒருவருடைய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் பல நபர்கள் இணைந்து தங்களது நண்பர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள். ஆனால், அவர் இதற்கு உடன்படுவதாகத் தெரியவில்லை.
இந்த வீடியோ 1.20 நிமிடங்கள் கொண்டது. இதில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள அஞ்சும் ஒரு நபரை அவரது நண்பர் அழுத்தி பிடித்திருப்பதை பார்க்க முடிகின்றது. தடுப்பூசி போட எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் அந்த நபர் தனது அச்சம் காரணமாக முறியடிக்கிறார். ஆனால், அவரது நண்பர்கள் அவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்துகிறார்கள்.
ALSO READ: Viral Video: உயிரைப் பணயம் வைத்து ஓடும் ரயிலில் ஏற முயன்ற 71 வயது மூதாட்டி
அவர் தடுப்பூசி செலுத்தும் நபரிடன் செல்ல மறுக்கிறார். அவரை சமாதானப்படுத்தும் அனைத்து முயற்சிகளும் வீணாகவே, அவரது நண்பர்கள் அவரை உறுதியாகப் பிடித்து, மருத்துவ ஊழியர்களிடம் அவருக்கு தடுப்பூசி போடுமாறு கேட்டுக் கொள்கின்றனர். மூன்று பேர் அவரை அழுத்தி பிடிக்க, அவருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த வீடியோவை ட்விட்டரில் அனில் துபே என்ற பத்திரிகையாளர் பகிர்ந்துள்ளார். ’தடுப்பூசி போட்டுக்கொள்வதும் ஒருவரை போட வைப்பதும் மிகவும் கடினமான விஷயம்’ என்று அவர் இதற்கு தலைப்பிட்டுள்ளார். அந்த ட்வீட்டின் படி, இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் நடந்தது.
இந்த வீடியோ வைரலாகியுள்ளது (Viral Video). இந்த சம்பவம் பலருக்கு வினோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. அந்த நபரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைக்க அவரது நண்பர்கள் எடுத்த முயற்சியை பலர் பாராட்டியுள்ளனர்.
“இதுதான் உண்மையான நட்பு. இப்படிப்பட்ட நட்பை பார்ப்பது அதிசயம்” என்று ஒரு ட்விட்டர் பயனர் எழுதியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR