கல்யாணம் என்றாலே கலாட்டாவுக்கு பஞ்சம் இருக்காது. எங்கு சுற்றி பார்த்தாலும் ஏதாவதொரு இடத்தில் வம்பு தும்பு, காமெடிகள் அரங்கேறிக் கொண்டே இருக்கும். இப்போதைய காலத்தில் ஆடல் பாடல் என கொண்டாட்டம் களைக்கட்டுகிறது. இதில் பல வேடிக்கையான சம்பவங்களும் நடந்து அன்றாடம் வைரல் வீடியோவில் இடம்பிடிக்கின்றன. அந்த வகையில் இப்போது ஒரு வீடியோ டிவிட்டரில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.கல்யாண நேரத்தில் அரங்கேற்றப்பட்ட ஒரு சம்பவம் மாப்பிள்ளைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதனை அவர் துளியும் எதிர்பார்க்கவில்லை. கல்யாணத்துக்கு வந்தவர்கள்கூட இப்படியொரு சப்பிரைஸ் நடக்கும் என யூகிக்கவில்லை. அப்படி என்ன சர்பிரைஸ் என கேட்கிறீர்களா? மாப்பிள்ளை மணமகளுக்காக காத்திருக்கும் நேரத்தில், திடீரென மணப்பெண் உடையில் அவருடைய நண்பர் வந்தது தான் டிவிஸ்ட்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அந்த பொண்ணு, அந்த பூ, அந்த பூனைகள்.... அட, அட, அட.. என்ன ஒரு காம்பினேஷன்: வைரல் வீடியோ


அதாவது மாப்பிள்ளை, தன் வருங்கால மனைவி மணக்கோலத்தில் வருவதை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார். முதன்முறையாக மணக்கோலத்தில் பெண் வர இருப்பதால், அவளை கொஞ்சம் வித்தியாசமாக பார்க்க வேண்டும் என்பதற்காக திரும்பி நின்று கொண்டிருக்கிறார். வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பவர்களும் காத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் திடீரென மணப்பெண் கோலத்தில் மண மகனின் நண்பர் வருகிறார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் சிரிப்பு வருகிறது. ஆனால் இது மணமகனுக்கு தெரியவில்லை. மெதுவாக சென்று மணமகனின் தோள்பட்டையை அவர் பிடிக்க, பெரிய எதிர்பார்ப்புடன் மணமகன் திரும்பி பார்க்கிறார்.



செம ஷாக்கான அவர், மணப் பெண் கோலத்தில் தன் நண்பன் வந்திருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அங்கிருந்தவர்களாலும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வீடியோ இப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. டிவிட்டரில் மட்டும் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை இந்த வீடியோ பெற்றிருக்கிறது. இப்படியொரு சர்பிரைஸை அந்த மணமகன் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார். செம கிரியேட்டிவிட்டி என அந்த மணமகனின் நண்பர்களுக்கு பலரும் லவ் சிமிலியை கொடுத்து வருகின்றனர். 


மேலும் படிக்க | ஓடுங்க ஓடுங்க...சிங்கம் வருது.. : மாடுகளை காப்பாற்றிய ஹீரோ நாய், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ