Viral Video: ஒவ்வொரு நாளும் பல வினோதமான, வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதில் விலங்குகளின் வீடியோக்களுக்கு நெட்டிசன்களிடையே தனி ஆர்வம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படிப்பட்ட ஒரு வீடியோவில், ஒரு சிங்கத்தின் (Lion) வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு சிங்கம் ஒன்று  பொது கழிப்பிடம் ஒன்றிலிருந்து வெளியே வருவதைக் காண முடிகிறது. இந்த வீடொயோ சமூக ஊடக பயனர்களை அதிர்ச்சியடையச் செய்ததோடு மகிழ்விக்கவும் செய்துள்ளது.


ஒரு நிமிடத்திற்கு செல்லும் இந்த காணொளியில் ’ஆண் கழிப்பறை’ என்று எழுதப்பட்டிருக்கும் பச்சை பலகை கொண்ட ஒரு பொது கழிப்பறையிலிருந்து சிங்கம் வெளியே வருகிறது. பின்னால் மக்கள் பேசிக்கொண்டு இருப்பது கேட்கிறது.


மக்கள் தங்கள் சஃபாரி வண்டியில் ஏற தயாராகிறார்கள். அப்போது திடீரென கழிப்பறையிலிருந்து ஒரு சிங்கம் வெளி வருகிறது. இதைக் கண்ட மக்களை அச்சம் பற்றிக்கொள்கிறது.


மக்கள் தங்கள் சஃபாரி வண்டியில் ஏற தயாராகிறார்கள். அப்போது திடீரென கழிப்பறையிலிருந்து ஒரு சிங்கம் வெளி வருகிறது. இதைக் கண்ட மக்களை அச்சம் பற்றிக்கொள்கிறது. அந்த சிங்கம், சில நொடிகள் நின்று சுற்றும் முற்றும் பார்க்கிறது. பின்னர், தன் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்து, அருகில் உள்ள ஒரு காட்டை நோக்கி நகர்கிறது.


இந்த வீடியோ, WildLense Eco Foundation என்ற ட்விட்டர் ஹேண்டில் மூலம் பகிரப்பட்டது. இந்த அமைப்பு இந்தியாவில் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் செயல்படும் ஒரு அமைப்பாகும். "கழிப்பறைகள் எப்போதும் பாதுகாப்பான இடங்களாக இருக்கும் என சொல்ல முடியாது. இந்த இடங்களை சில நேரம் பிறரும் பயன்படுத்தலாம்” என இந்த ட்வீட்டில் எழுதப்பட்டுள்ளது.


ALSO READ: Gir National Parkஇல் உதவிக் குரலுக்கு செவி சாய்த்த சிங்கம்: வைரலாகும் Video


சிங்கம் சிங்கிளாக வந்து கலக்கிய வீடியோவை இங்கே காணலாம்:



பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ வைரலாகி (Viral Video) , பல வேடிக்கையான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. சில பயனர்கள் இந்த அசாதாரண சம்பவத்தைப் பார்த்து சிரித்தனர், மற்றவர்கள் சிங்கத்தின் நடத்தையால் ஈர்க்கப்பட்டனர்.


இதைப் பார்த்து பயந்த சிலர், இனி ஜங்கிள் சஃபாரி செய்யும்போது, பொது கழிப்பறையை பயன்படுத்த மாட்டோம் என்று கூறினர்.


"கழிப்பறை கட்டப்பட்ட நிலம் ஒரு காலத்தில் சிங்கங்களின் குளியலறையின் இடமாக இருந்தது. அதை மனிதர்கள் கைப்பற்றினார்கள். மனிதர்கள் அதை நன்றாக பராமரிக்கிறார்களா இல்லையா என்பதைச் சரிபார்க்க சிங்கம் சென்றது” என்று ஒரு பயனர் வேடிக்கையாக எழுதியுள்ளார்.


"மேக் இன் இந்தியா பிராண்ட் அம்பாசிடர், தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகளை சரிபார்க்க திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்” என மற்றொரு பயனர் கருத்து தெர்வித்துள்ளார்.


இந்த அமைப்பால் டேக் செய்யப்பட்ட சுசந்தா நந்தா, ஐஎஃப்எஸ், சிங்கம் அநேகமாக தனது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க முயற்சிப்பதாக நகைச்சுவையாக கூறினார்.


இந்த வீடியோ பற்றி நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?


ALSO READ: 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்க்கஸில் இருந்து விடுதலை பெற்ற சிங்கம்.. உணர்ச்சிபூர்வமான சம்பவம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR