Python Viral Video: `துண்டா; இல்லை மலைப்பாம்பா’; கொஞ்சம் மரியாதை இருக்கட்டும் சார்!
இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன.
இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன. பல சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
அந்த வகையில் ராட்சத மலைப்பாம்பை தோளில் சுமந்தபடி ஒரு மனிதன் அசால்டாக செல்லும் வீடியோ நிச்சயம் உங்களை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும்.
இந்த ஆச்சரியமான வீடியோ (Viral Video) மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டதோடு, ஏராளமான மக்கள் இதற்கு தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!
வீடியோவில் அந்த மனிதன் ராட்சத நாகத்தை தோளில் சுமந்து கொண்டு அசால்டாக நடப்பதைக் காணலாம். சில நொடிகளுக்கான வைரலாகி வரும் வீடியோவில் சுமார் இருபது அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை தனது தோளில் தூக்கிச் செல்வதைக் காணலாம். இவ்வளவு நீளமான மற்றும் கனமான பாம்பைக் கண்டு அந்த நபர் பயப்படாமல் செல்வதையும் நீங்கள் பார்க்கலாம்.
அவர் மலைப்பாம்பை தோளில் சுமந்து செல்லும் போது, அவர் மலைப்பாம்பு தலையை தூக்கி வாயை திறப்பதைக் காணலாம். ஆனால், அவருக்கு இதனால், எந்த விதமான சலனமும் ஏற்படவில்லை.
வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ கிட்டத்தட்ட ஒரு வருடம் பழமையானது என்றாலும், சமூக ஊடகங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றாகும். இது இன்ஸ்டாகிராமில் hepgul5 என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் நெட்டிசன்கள் கடுமையாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR