ஒரு ஆட்டோவில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் என நினைக்கிறீர்கள். 3 அல்லது 4 என்று தான் பொதுவான பதிலாக இருக்கும். சிறிது பெரிய அளவிலான ஆட்டோ என்றால் அதிக படம் எதிர் எதிர் த்சையிலான இருக்கைகளுடன் சுமார் 6 பேர் பயணிக்கலாம். ஆனால், 27 பேர் பயணம் செய்து போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம் எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரே ஆட்டோவில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 27 பேர் பயணம் செய்து போக்குவரத்து காவல் துறைக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.


வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



 


மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை


உத்தரப் பிரதேச மாநிலம் பிந்தி கோட்வாலி மற்றும் ஃபதேபூர் இடையே அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை மறித்து, போஸீசார் சோதனையிட்ட போது இந்த விஷயம் தெரியவந்தது. வேகமாக பயணித்த ஆட்டோவிலிருந்து ஒவ்வொரு நபராக இறக்கி அனைவரையும் போலீஸார் எண்ணும் வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.


ஆட்டோவில் பயணித்த நபர்களை எண்னும் போலீஸாருக்கு மயக்கமே வந்து விட்டது. ஆட்டோ அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தால், ஆட்டோவை போக்குவரத்து காவல் துறையினர் துரத்திப் பிடித்தனர். அப்போது உள்ளே இருப்பவர்களை இறங்கச் சொல்லி போக்குவரத்து காவல் துறையினர் கூற ஏதோ 5, 6 பேர் வருவார்கள் என்று நினைத்தால், ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர். 6 பேர் மட்டுமே அதிகபட்சமாக அமரக்கூடிய அந்த ஆட்டோவுக்குள் ஓட்டுநர் உள்பட 27 பேர் இருந்தனர்.ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, 11,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.


ஆனால், இதுபோன்ற சம்பவம் நடப்பது முதன் முறையல்ல என்று கூறுகின்றனர் உ.பி. போக்குவரத்து காவல்துறையினர். 
வாகனத்தில் அளவுக்கு அதிகமாக ஆட்களோ, சரக்கோ ஏற்றினால் விபத்துக்கு வாய்ப்பு மிகமிக அதிகம் என்பது தெரிந்தும் கூட இது மாதிரியான சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே ஏற்படத் தான் செய்கிறது என்கின்றனர் காவல் துறையினர். 


மேலும் படிக்க | Viral Video: இது குதிரையின் பியானோ கச்சேரி... கேட்டுத் தான் பாருங்களேன்


மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR