இவ்வளவு பெரிய இந்த உலகை, நம் கையில் இருக்கும் சிறிய மொபைல் போன்கள் தற்போது சுருக்கி விட்டது. பேசுவதற்காக பயன்படுத்தப்பட்ட கைபேசிகள், தற்போது பல அற்புதமான விஷயங்களை பகிரவும் பயன்படுகிறது. நொடிப்பாெழுதில் எண்ணிலடங்கா விஷயங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ஒருவர், இருவர் அல்ல பல கோடி பேர் இதனால் பயனடைகின்றனர். இருப்பினும் சமூக வலைதளங்களில் மனதை பாதிக்கும் அல்லது மனதை நெருடும் வகையிலான சில வீடியோக்களையோ அல்லது புகைப்படங்களையோ பார்க்க நேரிடும். அவற்றில் ஒரு சில, பலரை இரவில் தூங்க விடாமல் கூட செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றது. அதில், ஒரு பெண் வெறும் கையால் விஷப்பாம்பை பிடிக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பென்றாலே பயம்தான்..! 


“பாம்பு என்றால் படையும் நடுங்கும்..” என்பார்கள், அதிலும் ஒரு சிலருக்கு பாம்பு என்ற பெயரை கேட்டாலே கை கால்கள் நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து விடும். இந்த உலகில் உள்ள முக்கால் வாசிப்பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு பாம்பை பார்த்தால் பயமோ பதட்டமோ வருவதில்லை. மாறாக, பாம்பை ஒரு பாசமிகு ஜீவனாக வளர்கின்றனர். ஒரு சிலர், பயமே இல்லாமல் எந்த இண்டு இடுக்குகளில் நுழைந்துள்ள பாம்புகளையும் லாவகமாக பிடிக்கின்றனர். ஒரு சிலர் ஒரு படி மேலே போய், பாம்பிற்கு முத்த மழை எல்லாம் கொடுக்கின்றனர். அப்படி, பாம்பை பார்த்து பயப்படாமல் ஒரு பெண் அதை தனது வெறும் கையால் பிடிக்கும் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | பாம்பிடம் வாயோடு வாய் வைத்த காவலர்.. கதிகலங்கிய நெட்டிசன்ஸ்: வீடியோ வைரல்


வெறும் கையால் பாம்பை பிடித்த பெண்..


இளசுகள் பலர் உபயோகிக்கும் சமூக வலைதளங்களுள் ஒன்று, இன்ஸ்டாகிராம். இந்த தளத்தில் பல பாம்பு வீடியோக்கள் வைரலாவது உண்டு. வெறும் கையால் ஒரு பெண் பாம்பை பிடிக்கும் வீடியோவும் இதன் மூலமாகத்தான் வைரலாகி வருகிறது. 


 



இந்த வீடியோவில் தைரியமாக செல்லும் ஒரு பெண், குடோனிற்குள் நுழைந்த கொடிய பாம்பை தனது வெறும் கையால்...அதுவுமொரு கையால் தூக்கிக்கொண்டு வருகிறார். இன்னொரு கையில், அந்த பாம்பை அடைத்து வைக்கும் டப்பாவையும் எடுத்து வருகிறார். இதை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அப்படியே அந்த பெண்ணையும் அவரது கையில் இருக்கும் அந்த பாம்பையும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். 


பாம்பே பாம்பை சாப்பிடுமா..?


ஒருவரை மாய்த்து விட செய்யும் விஷம் கொண்ட ஊர்வன வகைகளாக அறியப்படுபவைதான், பாம்புகள். அதிலும் அதிக விஷமுல்ல, ஆளையே சாய்க்கும் வகைகளை சேர்ந்தவைதான் ராஜ நாகம். உலகிலேயே அதிக நீளமுள்ள, அதிகம் விஷம் நிறைந்த பாம்பு வகைகள் இவைதான். இதை ஆசிய கண்டத்தில் மட்டுமே அதிகமாக பார்க்க முடியும் என சில அறிஞர்கள் கூறுகின்றனர். ராஜ நாகங்களை பொறுத்த வரை, அதன் ஒரு சில வகைகள் தங்கள் வகைகளை சேராத பிற கங்களையும், பல்லிகளையும் தனக்கு இரையாக மாற்றிக்கொள்ளுமாம். சில சமயங்களில் சின்ன சின்ன விலங்குகளான பறவைகள், முயல்கள் ஆகியவற்றையும் இந்த வகை நாகங்கள் சாப்பிடும் என கூறப்படுகிறது. ஒரு முறை சாப்பிட்டாலும் கொழுத்த உணவுகளை மட்டுமே சாப்பிடும் இந்த வகை ராஜ நாகங்கள், அதன் பிறகு எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இரையின்றி உயிர் வாழும் என சில விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | குட்டி நாகத்தை ‘லபக்’கென விழுங்கிய ராஜ நாகம்..! வைரலாகும் ‘திக் திக்’ வீடியோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ