Viral Video: ஒரு இடத்துல நிக்க மாட்டியா... அம்மாவை பாடாய் படுத்தும் குட்டி யானை!
பாலூட்டிகளில் யானைகள் தான் அதிக கர்ப்ப காலத்தைக் கொண்டிருக்கின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 630 நாட்கள் வரை அதாவது இருபத்தி ஒரு மாதம் முதல் இருபத்தி இரண்டு மாதங்கள் வரை. குட்டி யானை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகுதான் அதன் தும்பிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்.
இணையம் ஒரு தனி உலகம் அதில் தகவல்களுக்கு என்றும் பஞ்சமில்லை. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு தகவல் களஞ்சியமாக விளங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு தளமாகவும் உள்ளது என்றால் மிகையில்லை. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களையும், மன அழுத்தங்களையும் சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு வரப்பிரசாதமாக இருக்கின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடுகின்றன. விலங்குகளில் குரங்கு, யானை, பாம்பு, நாய் என இவற்றின் வீடியோவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சில நமது இதயத்தை கொள்ளையடித்து விடுகின்றன என்றே கூறலாம். அதிலும் சில நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுகின்றன. அந்த வகையில் மிகவும் கியூட்டான குட்டி யானையின் வீடியோ ஒன்று மீண்டும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் குட்டி யானை ஒன்று நில கொள்ளாமல் அங்கும் இங்கும் ஓடுவதையும், அதனுடன் இருக்கும் பெரிய யானை அதனை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதையும் காணலாம்.
வைரலாகும் குட்டி யானை விடியோவை இங்கே காணலாம்:
இரண்டு பெரிய யானைகளுடன் குட்டி யானை ஒன்று நடுரோட்டில் அங்கும் இங்கும் ஓடும் வீடியோ ஒன்று தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது லேட்டஸ்ட் சைட்டிங் க்ரூகர் என்ற கணக்கின் மூலம் பேஸ்புக்கில் இருந்து பகிரப்பட்ட வீடியோ. தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரூகர் தேசிய பூங்காவில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த அழகான வீடியோவை ரியா கிரிட்ஸிங்கர் படமாக்கியுள்ளார். மிகுந்த மகிழ்ச்சியுடன் சாலையில் குதித்து அங்கும் இங்கும் ஓடும் வீடியோ ஏற்கனவே மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
யானைகள் உலகின் மிகப்பெரிய நில விலங்குகள். ஒரு யானை முழு முதிர்ச்சி அடைய 16 ஆண்டுகள் ஆகும். ஆனால் யானை 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து வளரும். முழுமையாக வளர்ந்த யானை ஒரு நாளைக்கு 400 கிலோ வரையிலான உணவையும் சராசரியாக 150 லிட்டர் தண்ணீரையும் உட்கொள்கிறது. ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளை விட அழகானவை. பாலூட்டிகளில் யானைகள் தான் அதிக கர்ப்ப காலத்தைக் கொண்டிருக்கின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 630 நாட்கள் வரை அதாவது இருபத்தி ஒரு மாதம் முதல் இருபத்தி இரண்டு மாதங்கள் வரை. குட்டி யானை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகுதான் அதன் தும்பிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!
மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ