பொதுவாக இணைய தளத்தில், காட்டு விலங்குகள் தொடர்பான காணொளிகள் பதிவிடப்பட்ட உடனேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. இணைய தளத்தில் பகிரப்படும் வீடியோக்களில், சில நேரங்களில் இரண்டு விலங்குகள் பரஸ்பரம் அன்பைப் பொழிவதைக் காணலாம். சில சமயங்களில் பரஸ்பரம் உக்கிரமாக சண்டையிடுவதைக் காணலாம். அந்த வகையில் முதலை  தொடர்பான வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. முதலைகள்  நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தவுடன் எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி இரையாக்கி விடும். அதன் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


 காடு வாழ்க்கையின் ஒரு அற்புதமான தருணம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இது பிரச்சனைகளுக்கு அடிபணியாமல், தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது. இந்த வைரல் வீடியொவில், மான் ஆற்றைக் கடக்க வேகமாக நீந்திச் செல்வதைக் காணலாம். அப்போது தண்ணீரில் முதலைகள் மானை வேட்டையாட வேகமாக துரத்துகின்றன. அத்தகைய சூழ்நிலையில், பயமுறுத்தும் முதலை வாயில் அகப்படாமல் தப்பிக்க மான் மிக வேகமாக நீந்த தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் அதனை முதலை கொன்று விடும் என தோன்றும். ஆனால், மான் தப்பி கரை சேர்ததும் தப்பித்தோம் என குதிக்கிறது. அதனை பார்த்து நமக்கும் நிம்மதி ஏற்படுகிறது.


முதலையிடம் இருந்து தப்பிய மான் வீடியோவை இங்கே காணலாம்:



காட்டில் நடந்த இந்த அற்புதமான தருணத்தை 'இந்திய வன சேவை' (IFS) அதிகாரி கிளெமென்ட் பென் (@ben_ifs) பிப்ரவரி 7 அன்று ட்விட்டரில் வெளியிட்டார். இந்த வீடியோவின் தலைப்பில் அவர் எழுதினார் - உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கான பாய்ச்சல்! இந்த செய்தியை எழுதும் வரை இந்த 1 நிமிட வீடியோ 3 லட்சத்து 19 ஆயிரம் பார்வைகளையும், ஏழரை ஆயிரம் லைக்குகளையும், 1200க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. பயனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் சுவாசம் ஒரு கணம் நின்றுவிட்டதாக எழுதினர். மற்றொரு பயனர் எழுதினார் - என்ன ஒரு பாய்ச்சல் என வியந்துள்ளார். இதேபோல், பல பயனர்கள் மானின் தைரியத்தை பாராட்டியுள்ளனர். ஏனென்றால் மான... மனம் தளராமல் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி முதலையிடம் இருந்து தப்பித்தது என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | தொண்டையில் கை விட்ட நபர்... நறுக்குனு கடித்த முதலை - வீடியோவ பார்த்தா பயந்துருவீங்க


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | உன்னை பிடிக்காம விடமாட்டேன்! கங்கணம் கட்டிக் கொண்டு துரத்தும் பென்குயின்! பல்பு கொடுக்கும் பறவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ