மல்லுக்கட்ட வந்த மாடு... கொத்தி ஓட விட்ட வாத்து - வைரல் வீடியோ
மாடுகள் சில கூட்டமாக வாத்துவிடம் சென்று மல்லுக் கட்டிக் கொண்டிருக்க திடீரென அந்த வாத்து ஒரு மாட்டை கொத்தி மொத்த மாடுகளையும் அலறவிட்டிருக்கிறது. இந்தவீடியோ இப்போது வைரலாகியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் கூட, கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும்.... சிங்கம் சிங்கிளா தான் வரும் என சொல்லுவார். அப்படி சிங்கிளாக சென்று மாட்டு கூட்டத்தையே அலறவிட்டிருக்கிறது வாத்து ஒன்று. உருவத்தில் மிகப்பெரிய மாடுகள், வாத்துவை அசால்டாக எண்ணி, அதனிடம் பாசாங்குகள் காண்பித்து பயமுறுத்த நினைக்க, திடீரென மாடுகளை கொத்தி பயப்படுத்தியிருக்கிறது வாத்து ஒன்று. பயமுறத்த நினைத்த மாடுகளையே பயத்தில் ஆழ்த்திய அந்த ஒரு வாத்துவின் வீடியோ இப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
மேலும் படிக்க | யம்மாடி..31 அடி நீள முதலை, இணையத்தை அதிர வைக்கும் வீடியோ வைரல்
அதுவும் கெத்தாக மாடுகள் இருக்கும் கூட்டத்துக்குள் நுழைகிறது அந்த வாத்து. கொஞ்சம் கூட அதன் முகத்தில் பயம் என்பதே தெரியவில்லை. வாத்துவுடன் ஒப்பிடும்போது மாடுகளின் உருவம் என்பது மிகப்பெரியதாக இருக்கிறது. ஒவ்வொரு மாடும், வாத்து முன்பு வந்து அதனை முட்டி விடுவது போல் சீன் போடுகின்றன. உடனே வாத்து, என்கிட்டயாடா சீன் போடுறீங்க.... இருங்கடா முட்டாப் பசங்களா உங்கள இப்ப ஓட விடுறேன் பாரு என மனதில் நினைதுக் கொண்டு, சீன் போட்ட மாடுகளை சிங்கிளாக ஓட விட்டிருக்கிறது. அதாவது தன்னை பயமுறுத்த நினைத்த மாடுகளிடம் வீரம் என்றால் என்ன? கிளாஸ் எடுத்திருக்கிறது அந்த வாத்து.
Amazing Nature என்ற டிவிட்டர் பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. காட்டுகுள் மாடுகள் கூட்டமாக இருக்கின்றன. அப்போது வாத்து ஒன்று அந்த மாடுகளின் கூட்டத்துக்குள் செல்கிறது. திடீரென அந்த கூட்டத்தில் இருந்த மாடுகள் சில, வாத்து முன்பு வந்து அதனை பயமுறுத்துவது போல் ஆட்டம்போடுகின்றன. வாத்துவுக்கு கொஞ்சமும் பயமில்லை என்பது அது நடந்து செல்வதிலேயே தெரிகிறது. திடீரென ஒரு மாட்டின் முகத்தில் எந்தவித பயமும் இல்லாமல் கொத்திவிடுகிறது. உடனே, வாத்தை பார்த்து அந்த மாடுகள் ஓடுகின்றன. இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேலான பார்வைகளைப் பெற்றிருக்கிறது.
மேலும் படிக்க | இவருதாங்க அந்த அப்பாடக்கர்: முதலையிடம் மாஸ் காட்டும் முட்டாள் இளைஞன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ