சமூக ஊடகங்களில் எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும் பாம்பு வீடியோக்கள் என்றால் மிக எளிதில் வைரலாகும். பாம்பு என்றால் படையே நடுங்கும். அதிலும் கடுமையான விஷப்பாம்புகளில் ஒன்றான ராஜ நாகம் என்ற பெயரைக் கேட்டாலே நமது உடல் அச்ச உணர்வு பரவும் என்றால் மிகையில்லை. இந்நிலையில், பயங்கரமான தோற்றத்தையும், கடுமையான விஷத்தையும் கொண்ட இரு ராஜ நாகங்களுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டால், எப்படி இருக்கும். நினைத்து பார்கக்வே பயங்கரமாக இருக்கிறது அல்லவா....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதல் உணர்வு என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அனைத்து விலங்குகளுக்கும் சொந்தமானது. தனது காதலியை யாராவது சீண்ட நினைத்தால், அல்லது கவர நினைத்தால் மனிதன் எளிதில் விடுவதில்லை. அந்த உணர்வு விலங்குகளுக்கும் உண்டு. அதே போல் மனதிற்கு பிடித்த பெண்ணை கவர முயற்சிக்கும் ஆண்களும் உண்டு.  அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், பெண் ராஜ நாகத்தை கவர்ந்திழுக்க, இரு ராஜநாகங்கள்  இடையே கடுமையாக சண்டையிடுவதைக் காணலாம். பெண் பாம்பின் முன்னிலையில் இரண்டு பாம்புகள் மோதிக் கொண்ட காட்சி சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.


வைரலாகும் ராஜ நாகத்தின் சண்டை வீடியோவை இங்கே காணலாம்:



பெண் ராஜா நாகப்பாம்பை கவர ஒரு ஆண் ராஜா நாகப்பாம்பு நீண்ட நேரம் போராடுவதை வீடியோவில் காணலாம். இரண்டு ஆண் ராஜ நாகப் பாம்புகளும் பரஸ்பரம் சுமார் 5 மணி நேரம் சண்டையிடுகின்றன. இரு ராஜ நாகங்களும் புதர்களில் பின்னி பிணைந்து ஆக்கிரோஷமாக சண்டையிடுகின்றன. இறுதியில், இரண்டு ஆண் ராஜா நாகப்பாம்புகளில் ஒன்று தோல்வியை ஒப்புக் கொண்டு காட்டிற்குள் ஓடி விடுகிறது. வெற்றி பெற்ற ஆண் ராஜா நாகப்பாம்பு தனது காதலியை தக்க வைத்துக் கொண்டது. இனி இந்த ஏரியாவிலேயே உன்னை பார்க்கக் கூடாது என்பது போல் இருந்தது அதன் செய்கை. காதல் உணர்வை விவரிக்கும் வீடியோ  மிகவும் வைரலாகி வருகிறது.


வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை ஸ்மித்சோனியன் சேனல் (Smithsonian Channel) யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளது. இதுவரை இந்த வீடியோவை சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். யூடியூப்பில் உள்ள ஸ்மித்சோனியன் சேனல்  வீடியோவின் விளக்கத்தில்,  ‘இரண்டு ஆண் ராஜ நாகப்பாம்புகள் காதலை அடைய நடத்திய போராட்டம்’  என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் காடுகளில் ஏராளமான ராஜ நாகங்கள் உள்ளன. அதை ஆவணப்படம் எடுக்க வெளிநாடுகளில் இருந்து பலர் வருகிறார்கள். அது போன்ற ஒரு நிகழ்வில், பெண் நாகத்தை அடைய ஆண் நாகம் இரண்டும் சண்டையிடும் இந்த சம்பவத்தை கேமராவில் கைது செய்த ஒருவர், அதை யூடியூப்பில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ பெரிய அளவில் வைரலாகியுள்ளது. 


இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகம். இணையத்தில் எண்ணிடங்காத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றின் மூலம் நாம் அறியாத விலங்குகளின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றன. பாம்புகள், வன விலங்குகள், பறவைகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில பார்ப்பவர்களுக்கு பீதியை ஊட்டுவதாகவும், சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். 


மேலும் படிக்க | Viral Video: ஆண் மயிலின் அற்புத ஒயிலாட்டம்... மனம் இரங்காத பெண் மயில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ