முட்டையை அபேஸ் செய்த சிறுமியை... போட்டுத் தாக்கிய தாய் மயில்... வைரல் வீடியோ
இணையவாசிகளுக்கு விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் மீது தனி ஈர்ப்பு உள்ளது. மயில், கழுகு, கிளி போன்ற பறவைகள் மட்டுமல்லாது நாய், பூனை, யானை, பாம்பு, குரங்கு ஆகியவற்றின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன.
Viral Video of Peacock: சமூக ஊடக தளங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் பார்ப்பதற்கு அரிய, பிற உயிரினங்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகள் பறவைகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று காண முடியாத பல நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் காண்கிறோம்.
இணையவாசிகளுக்கு விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் மீது தனி ஈர்ப்பு உள்ளது. மயில், கழுகு, கிளி போன்ற பறவைகள் மட்டுமல்லாது நாய், பூனை, யானை, பாம்பு, குரங்கு ஆகியவற்றின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. இவற்றில் நம்மால் நம்ப முடியாத பல அரிய விஷயங்களை நாம் காண்கிறோம்.
தாயன்புக்கு ஈடு இணை கிடையாது. அது மனிதர்களானாலும் சரி, மற்றும் விலங்குகள் ஆனாலும் சரி, ஒரு தாய் தன் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை அளவிட முடியாது. குழந்தையை ஒரு தாய் அக்கறையுடன் பார்த்துக்கொள்வது போலதான் விலங்குகளும் பறவைகளும் தங்கள் குட்டிகளையும் முட்டைகளையும் பாதுகாக்கின்றன. அதை உறுதிபடுத்தும் வகையிலான மயில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி (Viral Video) வருகின்றது.
வைரலாகும் வீடியோவின் துவக்கத்தில் ஒரு மயில் மேடான ஒரு நிலப்பரப்பில் தனது முட்டைகளை அடை காத்தவாறு இருப்பதை காண முடிகின்றது. அதன் அருகில் சில முட்டைகள் இருப்பதையும் காணலாம். அப்போது அங்கு எங்கிருந்தோ வந்த ஒரு சிறுமி மயிலை பிடித்து தூர வீசி விட்டு மயிலின் முட்டைகளை மடமடவென எடுக்கத் தொடங்குகிறார். ஆனால், தாய் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா என்ன...
மேலும் படிக்க | பேய்க்கு பளார் என விழுந்த அடி, சிரிப்பு கேரண்டி - வைரல் வீடியோ
மயில் பெண்ணுக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை கீழே உள்ள வீடியோவில் காணலாம்: