Viral Video: ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண், ரயில்வே வீரர் துணிச்சல் செயல்
மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்ணை ஆர்.பி.எப் வீரர் காப்பாற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்ணை ஆர்.பி.எப் வீரர் காப்பாற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
மும்பையின் (Mumbai) கல்யான் ரயில் நிலையத்தில் நேற்று நின்றுக் கொண்டு இருந்த ரயிலில் ஏறியுள்ளார் கர்ப்பிணி பெண். அப்போது தான் ஏறிய ரயில் தவறு என்பதை உணர்வதற்குள் ரயில் நகரத் தொடங்கியது. இதைகிடையில் அந்த கர்ப்பிணி பெண் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றத்துள்ளார்.
ALSO READ: Self Confidence: கடுமையாக உழைக்கும் 75 வயது பாட்டியின் வீடியோ வைரல்
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த கர்ப்பிணி பெண் தவறி விழுந்தார். அப்போது அங்கு அருகில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை (RPF) கான்ஸ்டபிள் எஸ்.ஆர்.கண்டேகர் என்பவர் துரிதமாக செயல்பட்டு கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றினார். இந்த விவகாரம் தொடர்பாக மும்பை மத்திய ரயில்வே செய்தி தொடர்பாளர் சிவாஜி சுதர் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ALSO READ: Viral Video: கூரை மீது ஏறி அமர்ந்து கீழே வர மறுத்த மணப்பெண், காரணம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR