Viral Video: விமானத்தில் வழங்கிய உணவில் ‘பாம்பின் தலை’; அதிர்ச்சியில் உறைந்த பணிப்பெண்
விமானத்தில், தனக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் துண்டிக்கப்பட்ட தலை இருப்பதைக் கண்டு, விமானப் பணிப்பெண் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.
துருக்கியைச் சேர்ந்த விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர், விமானத்தில், தனக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் துண்டிக்கப்பட்ட தலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். One Mile at a Time என்ற ஏவியேஷன் வலைப்பதிவை மேற்கோள் காட்டி, The Independent செய்தி வெளியிட்டுள்ளது. ஜூலை 21 அன்று துருக்கியில் உள்ள அங்காராவிலிருந்து ஜெர்மனியில் உள்ள டுசெல்டார்ஃப் நகருக்குச் சென்ற சன்எக்ஸ்பிரஸ் விமானத்தில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்ததாகக் கூறியது. உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு இடையில் ஒரு சிறிய பாம்பின் தலை மறைந்திருந்ததை பார்த்த விமான பணிப்பெண், மிகவும் அதிர்ச்சி அடைந்தார் .
ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில், பாம்பின் துண்டிக்கப்பட்ட தலை உணவு தட்டில் நடுவில் கிடப்பதைக் காணலாம். வீடியோவை கீழே உள்ள ட்விட்டர் பதிவில் காணலாம்:
மேலும் படிக்க | Viral Video: ரோபோவுடன் சிறுவன் விளையாடிய CHESS; தவறுக்கு கை விரலை முறித்த ROBOT
இது தொடர்பாக உடனடியாக பதிலளித்த SunExpress விமான நிறுவனத்தி பிரதிநிதி, துருக்கிய பத்திரிகைகளிடம் கூறுகையில், இந்த சம்பவம் "முற்றிலும் கண்டிக்கத் தகுந்தது" என்று கூறினார். உணவு வழங்கிய நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது என்றும், இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் விமான நிறுவன பிரதிநிதி மேலும் கூறினார்.
மேலும் படிக்க | Viral Video: ஆமைக்கு ஆசையாய் ஊட்டி விடும் குரங்கு; இணையவாசிகளை கவர்ந்த க்யூட் வீடியோ
"விமானத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் செயல்படும், எங்கள் விமான நிறுவனத்தில் எங்கள் விருந்தினர்களுக்கு நாங்கள் வழங்கும் சேவைகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை. எங்கள் விருந்தினர்கள் மற்றும் விமான பணியாளர்கள் இருவரும், இனிமையான பாதுகாப்பான விமான அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே எங்கள் முன்னுரிமை" விமான நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மறுபுறம், உணவை சப்ளை செய்த கேட்டரிங் நிறுவனம், தங்கள் உணவில் பாம்பு தலை இருந்திருப்பதற்கான சாத்தியக் கூறு இல்லை என்று மறுத்துள்ளது. கேட்டரிங் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், உணவுகள் 280 டிகிரி செல்சியஸில் சமைக்கப்படுகிறது. உணவில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் தலை சமைக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே இது பின்னால் வந்திருக்கலாம் என கூறியுள்ளது.
மேலும் படிக்க | Viral video: முதன்முதலாக பாதாம் சாப்பிட்ட அணிலின் க்யூட் ரியாக்ஷன்
மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ