ஹாலிவுட் உலகில் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் ஹிட் அடித்து உலகளவில் டிரெண்டான திரைப்படம் ஸ்பைடர்மேன். இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட்டப்பட்டது. அனைத்து மொழிகளிலும் கலெக்ஷனில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்த இந்த திரைப்படத்துக்கு குழந்தைகளும் ரசிகர்களாக உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | யம்மாடி..31 அடி நீள முதலை, இணையத்தை அதிர வைக்கும் வீடியோ வைரல்


அந்தளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்பைடர்மேன், இப்போதும் மீண்டும் வைரல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.சினிமா படத்திற்காக அல்ல, படத்தில் வருவதுபோல் காகிதத்தில் செய்யப்பட்ட பொம்மை ஸ்பைடர்மேன். யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோவில், காகிதத்தில் செய்யப்பட்ட பொம்மை ஸ்பைடர்மேன் வானளாவிய உயரத்தில் பறக்கிறது. காற்றில் மிதந்து பறக்கும் இந்த பொம்மை ஸ்பைடர்மேன் காண்போரை வியக்க வைக்கிறது. 




யூடியூப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன் ஒருவர், பொம்மை ஸ்பைடர்மேன் வானாளவிய உயரத்தில் பறப்பது என்பது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வெயிட் இல்லாததால் அவ்வளவு உயரத்தில் பறப்பது என்பது சாத்தியம் எனத் தெரிவித்துள்ள அவர், ஆனால் கரெக்டாக கீழிறங்குவது எப்படி? என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார். வானத்தில் திடீரென தோன்றிய இந்த ஸ்பைடர் மேனை அப்பகுதி மக்கள் கண்டு வெகுவாக ரசித்தனர். 


மேலும் படிக்க | மல்லுக்கட்ட வந்த மாடு... கொத்தி ஓட விட்ட வாத்து - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ