காட்டு விலங்குகள் சண்டையிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது சகஜம் தான். வேட்டைக்காக நடக்கும் போராட்டங்கள் தொடர்பான வீடியோக்களை பார்த்திருக்ககூடும். ஆனால், புலிகள், சிங்கங்கள் போன்ற விலங்குகள் தங்களுக்குள் சண்டையிடும் வீடியோக்களை அரிதாகவே காண முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்களின் மனதை கவர ஆண்கள் பல்வேறு வழிகளை பின்பற்றுகின்றனர். சிலர் வெற்றி பெறுகிறார்கள்; சிலர் தோல்வி அடைகிறார்கள். கல்லூரி நாட்களில் இதுபோன்ற காட்சிகளை அதிகம் பார்த்திருக்ககூடும். 
மனிதர்கள் மட்டுமல்ல, வன விலங்குகளும் காதலில் ஜெயிக்க பல  வகையில் முயற்சிக்கின்றன. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சமீபத்திய வீடியோ இதற்குச் சான்று. 


காட்டில் பெண் புலியை கவர இரண்டு புலிகள் எப்படி ஒன்றுடன் ஒன்று உக்ரமாக சண்டையிடுகின்றன என்பதை இந்த வீடியோவில் காணலாம். நீண்ட நேரம் சண்டை நடந்து இறுதியில் ஒரு புலி வெற்றி பெறுகிறது.


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளியில், வனப்பகுதியில் இரண்டு பயங்கரமான புலிகள் நடமாடுவதைக் காணலாம். அவர்களுடன் ஒரு புலியும் காணப்படுகிறது. சிறிது நேரத்தில் இரண்டு புலிகளும் பரஸ்பரம் சண்டையிட ஆரம்பித்தன. அந்தக் காட்சியை வெகு தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது புலி. இருவருக்கும் இடையே பல சுற்று சண்டை நடக்கிறது. இருப்பினும், இந்த சண்டை பார்ப்பதற்கு அவ்வளவு ஆபத்தானதாகத் தெரியவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இறுதியில் ஒரு புலி வெற்றி பெறுகிறது. சமூக வலைதளவாசிகளை இந்த வீடியோ பெரிதும் கவர்ந்துள்ளது.


வைரலான வீடியோவை இங்கே காணலாம்:




இந்தக் காணொளியில் பெண் புலிக்காக இரண்டு புலிகள் சண்டையிடும் அரிதான காட்சியைக் காணலாம். இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "எதிர்பார்த்தபடி, இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணுக்காக சண்டையிடுகிறார்கள். வலிமைமிக்கவன் போரில் வென்று ராணியைக் அடைகிறான்." என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா... குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR