Cute Viral Video: இன்றைய காலகட்டத்தில் மொபைல் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மொபைலின் பயன்பாடு அதிகமாக உள்ளது. வரம்பு இல்லாமல் மொபைலை பயன்படுத்தினால் ஆபத்து என வல்லுநர்கள் எச்சரித்தாலும், அதை பொருட்படுத்தாமல் பலரும் பல மணிநேரத்திற்கு மொபைலை பயன்படுத்துகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இங்கு ஒரு சிறு குழந்தை மற்றொரு குழந்தைக்கு மொபைல் போனை பயன்படுத்த வேண்டாம் என்று வீடியோ கால் மூலம் சொல்லிக்கொடுக்கிறது. அப்பாவித்தனத்துடன், பேசும் அந்த குழந்தையின் வீடியோ பல்வேறு வயதினருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. அந்த வைரல் வீடியோவை பார்க்க இதை கிளிக் செய்யவும்: https://www.facebook.com/reel/641143434485962


க்யூட் வீடியோ


கன்னட மொழியில் உள்ள அந்த வீடியோவில்,  மொபைலை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்து அந்த குழந்தை சொல்கிறது. "மொபைல் பயன்படுத்தும் போது கண் வலி ஏற்படுகிறது. பின்னர் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும்" என்று அந்த குழந்தை க்யூட்டாகப் பேசுகிறார். 


மேலும் படிக்க | கல்யாணம் ஆன உடனேயே இப்படியா? 'அந்த' இடத்திலேயே அடித்த மணமகள், வைரல் வீடியோ!!


அதாவது, மொபைல் வீடியோ காலின் மறுமுனையில், அந்த பெண்ணின், தம்பி இருக்கிறான். அவனிடம் அந்த சிறு பெண்,"அம்மா உனக்கு மொபைல் தரமாட்டார். அவரும் மொபைலை பார்க்க மாட்டார், நீயும் பார்க்காதே" என்கிறாள். அதற்கு அந்த பையன் மொபைல் பார்க்க வேண்டும் என அடம்பிடிக்க,"கண் வலிக்கும். ரொம்ப வலிக்கும். நீ மொபைலை பார்க்காதே" என அந்த பெண் அறிவுறுத்திகிறாள். 


இருப்பினும், அவளின் தம்பி தொடர்ந்து அழுக ஆரம்பித்தவுடன்,"நீ நல்ல பையன் தானே... அதான் சொல்கிறேன், மொபைலை பார்க்காதே என்று. இல்லையென்றால், எல்லாரும் உன்னை 'கெட்ட பொண்ணு' என்பார்கள்" என்று தம்பியிடம் கூறுகிறாள். 


மேலும்,"நீ தொடர்ந்து, மொபைல் பார்த்தால் வாத்து கண் போல் பெரிதாகிவிடும், அவ்வுளவுதான். பின், எல்லோரும் சேர்ந்து போய் டாக்டரைதான் பார்க்கணும்"  என்றாள். இருந்தாலும், அவன் தம்பி அழுதுகொண்டே இருக்க,"சரி, ஐந்து நிமிடம் மொபைல் பார்த்துக்கோ" என்று சொல்லிவிட்டு அந்த பெண் குழந்தை நடந்துபோய்விட்டாள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


100 சதவீதம் உண்மை


இந்த வீடியோவானது ‘ஆஷா மஞ்சுச்சார்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டு ஏற்கனவே ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. மொத்தத்தில் இந்த 2 வயது குழந்தை பேசுவது 100 சதவீதம் உண்மை. 


பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தவும், அவர்களின் வேலையை தொந்தரவு செய்யாமல் இருக்கவும் அடிக்கடி அவர்களிடம் மொபைலை பயன்படுத்த கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதில் வரும் ஆபத்துகள் குறித்து யோசிப்பதில்லை. இந்த குழந்தை அது குறித்த எச்சரிக்கை மணியை பெற்றோர்களை நோக்கி அடித்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.


மேலும் படிக்க | சமூக வலைதளத்தையே அதிர வைத்த பாம்பு! மரத்தில் ஏறிய வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ