சமீப காலமாக ATM கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில்  கொள்ளையர்கள் கும்பல் ஒன்று பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபியை திருடி, ஏடிஎம் கேபினுக்குள்  செலுத்தி இயந்திரத்தை பெயர்த்து எடுத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 23-24 (சனிக்கிழமை-ஞாயிறு) நள்ளிரவில் மிராஜ் தொழில்துறை நகரத்தில் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் அமைந்துள்ள பிரதான சாலை மற்றும் சந்தையில் அந்த நேரத்தில் கணிசமான மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இந்த சம்பவம் ஏடிஎம்  மையஹ்ட்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


திருடப்பட்ட ஜேசிபியை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்தனர். ஆனால், அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 27 லட்சத்தை அப்படியே விட்டு திடீரென தப்பிச் சென்ற திருடர்கள் கும்பலை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். மிராஜ் புறநகரில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும்  கிராமவாசி ஒருவரின் ஜேசிபியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆக்சிஸ் வங்கி பதிவு செய்த புகாரின் அடிப்படையில் இப்போது திருடர்கள் கும்பலை  வலை வீசி தேடி வருகின்றனர்.


மேலும் படிக்க | Viral Video: வசூல் ராஜா MBBS பட பாணியில் 10 வகுப்பு மாணவனின் ஹை டெக் காப்பி


வீடியோவை இங்கே காணலாம்: