காடுகளுக்குள் இருக்கும் வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டி இருக்கும் கிராமங்களுக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையான ஒன்று. ஓசூர், சத்தியமங்கலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் யானைகள் இடம் பெயரும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும். இதேபோல் வறட்சி காலங்களிலும் தண்ணீருக்காக ஊருக்குள் நுழைவதை கேள்விப்பட்டிருப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உலகின் பயங்கரமான பாம்பு இதுதான்... அதை இந்த பையன் என்ன செய்றான் பாருங்களேன்!


ஆனால், இப்போது மழைக் காலமாக இருக்கும் சமயத்தில் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வனவிலங்குகள் தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன. இதனை அப்பகுதி பொதுமக்களே எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் குறிப்பிட்ட சமயங்களில் தான் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பது அவர்களின் கணிப்பு. அந்த கணிப்பை பொய்யாக்கும் வகையில் காட்டு மாடு ஒன்று குடியிருப்புகளுக்குள் வந்திருக்கிறது. புலி, யானை சிறுத்தை மற்றும் கரடிகளை பார்த்திருக்கும் அவர்கள் காட்டு மாடுகள் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வருவதை பார்த்ததில்லை. 


ஆனால், உதகை அருகே கீழ் உபதலை கிரமத்திற்குள் வன பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டுமாடு ஒன்று பொதுமக்கள் வசிக்கும் வீட்டின் முன்பு சென்றுள்ளது. அவ்வாறு சென்ற காட்டெருமை பொது மக்களை ஒன்றும் செய்யாமல், வளர்ப்பு மாடுகளை போல் வீட்டின் முன்பு வாலியில் வைக்கபட்டிருந்த  நீரை குடித்து விட்டு சென்றது. இந்த காட்சியை வீட்டில் இருந்த நபர் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வீடியோ சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள் காட்டு மாட்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்ததுடன் வீட்டுக்குள் சென்று பாதுகாப்பாக இருந்து கொண்டனர். மாடும் தண்ணீரை குடித்த பிறகு அமைதியாக காட்டுக்குள் சென்றது. 



மேலும் படிக்க | Viral Video: மான்குட்டியை குத்தி குதறும் கழுகு... கண்ணீரை வரவழைக்கும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ