வைரல் வீடியோ: சமூக வலைதளங்களில் சில நேரங்களில் மனிதர்கள் தொடர்பான வேடிக்கையான அல்லது அதிர்ச்சியான நிகழ்வுகள் மட்டுமல்லாது விலங்குகளின் வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறது. 
ஆச்சர்யங்களை அள்ளிக் கொடுப்பதில் சமூக ஊடகங்கள் நம்மை ஏமாற்றுவதே இல்லை. சமூக ஊடக தளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன. அந்த வகையில்,  காட்டுப் பூனையின் பாய்ச்சலை காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. காணொளி பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. ஏனெனில் அந்த வீடியோவில் காட்டுப் பூனையின் அற்புதத் பாய்ச்சல் அனைவரையும் கவந்துள்ளது. அதை மிகவும் விரும்பி பார்த்த நெட்டிசன்கள் பூனை குதிக்கிறதா அல்லது பறக்கிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரலாகி வரும் வீடியோவில் காட்டு பூனையின் அற்புதமான பாய்ச்சலைக் காணலாம். இதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார். 'குதிக்கிறதா பறக்கிறதா????' என்ற தலைப்பில் இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்


வெறும் 45 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருப்பதால் பார்வையாளர்கள் வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள். ஒரு காட்டுப் பூனை ஆற்றின் கரையில் அமர்ந்திருப்பதை வைரலான வீடியோவில் காணலாம். திடீரென்று அது ஒரு அற்புதமான பாய்ச்சலுடன் மறுபக்கம் தாவுகிறது. இந்த அற்புதமான தருணத்தை யாரோ ஒருவர் கேமராவில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதில் வைரலாகியுள்ளது. காட்டுப் பூனை குதிப்பதைத் தெளிவாகக் காணக்கூடிய ஸ்லோ மோஷனில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. காணொளியைப் பார்த்தால் காட்டுப் பூனை துள்ளிக் குதிக்கிறதா அல்லது பறக்கிறதா  நமக்கே சந்தேகம் வரும்.


மேலும் படிக்க | Viral Video: நாய்க்குட்டியை கட்டி அணைக்கும் பூனை; இணையத்தை கலக்கும் வீடியோ!


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:


 



 


இந்திய வன அதிகாரி டாக்டர். இந்த வீடியோவை டாக்டர் சாம்ராட் கவுடா IFS தனது ட்விட்டர் கணக்கு மூலம் பகிர்ந்துள்ளார்.  இந்த காணொளியை பார்த்த அவரால் இதை பகிராமல் இருக்க முடியவில்லை. வீடியோ மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. 'குதிக்கிறதா பறக்கிறதா????' என்ற தலைப்பில் இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இதுவரை 24.1K பார்வைகள் மற்றும் நிறைய லைக்குகளை பெற்றுள்ளது. பல கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கருத்து தெரிவித்த ஒரு பயனர் இந்த காட்டு பூனையை பார்த்தால், இது விலங்குகளின் ரஜினிகாந்த் போல் தோன்றுகிறது என பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | Viral Video: கண்களுக்கு விருந்தாகும் பாம்புகளின் காதல் நடனம்... யாரும் பார்த்திராத அரிய காட்சி!


மேலும் படிக்க | Viral Video: பாம்பை கபளீகரம் செய்ய துடிக்கும் ராஜநாகம்; இணையத்தை அதிர வைத்த வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ