Instagram பக்கத்தின் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலம்!
பிரபல புகைப்பட பகிர்வு செயலியான Instagram-ல் பதிவிடுவது மூலம், ஒரு பதிவிற்கு ரூ.80 லட்சம் வரை விராட் கோலி சம்பாதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பிரபல புகைப்பட பகிர்வு செயலியான Instagram-ல் பதிவிடுவது மூலம், ஒரு பதிவிற்கு ரூ.80 லட்சம் வரை விராட் கோலி சம்பாதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
சமூக வலைதள பக்கங்களின் பதிவுகளை பட்டியலிட்டு பகிரும் Hopper HQ இந்த தகவலை வெளியிட்டுள்ளது. Hopper HQ தகவலின்படி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது Instagram பக்கத்தில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.80 லட்சம் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளது.
தனது Instagram பக்கத்தில் 23.2 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டிருக்கும் கோலி தற்போது தன்னுடைய ஒவ்வொரு பதிவிற்கும் $120,000 பெறுவதாக தெரிகிறது.
Instagram பக்கத்தின் மூலம் அதிகம் சம்பாதிப்பவர் பட்டியலில் விராட் (இந்தியாவில்) முதலிடத்தை பிடித்துள்ளார். உலக அளவில் கொயில் ஜெர்னர் முதலிடத்தை வகிக்கின்றார். இவரை அடுத்து குத்துச்சண்டை வீரர் ப்ளோட் மேவேதர் மற்றும் அமெரிக்க NBA பிரபலம் ஸ்டீபன் கர்ரி இடம்பெற்றுள்ளனர். இவர்கள் முறையே $110000 மற்றும் $107000 பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த பட்டியல் இவர்களோடு நின்றுவிடவில்லை,. $750000 சம்பாதிக்கும் கிரிஸ்டினோ ரோனால்டோ, $600000 சம்பாதிக்கும் நெய்மர் 8வது இடத்திலும், $500000 சம்பாதிக்கும் லியோனல் மெஸ்ஸி 9-வது இடத்திலும் உள்ளனர்.
கடந்தாண்டு இந்தப்பட்டியலில் முதல் இடம் பிடித்த சாலினா கோமெஸ் இந்தாண்டு $800000 டாலர்களுடன் பின்தங்கியுள்ளார்.
இந்த புள்ளிவிவரங்களை பார்க்கையில்.. மக்களது பொழுதுபோக்கு காரணியாக கருதப்படும் ஒரு விசயம் யாரோ ஒருவருக்கு பணத்தை வாரி இரைக்கும் அட்சய பாத்திரமாக தான் இருக்கிறது என தெரிகிறது.