வலைதளத்தில் மட்டும் அரசியல் நடத்துபவர் நடிகர் கமலஹாசன் என நெட்டசன்கள் மத்தியில் பரவலாக கருத்து பரவி வருகின்றது. ஆனால் ஊடங்களின் வாயிலாக சொல்லும் கருத்து மக்களிடையே பகிரங்கமாகவும் நேரடியாகவும் செல்கிறது என்பது உலகநாயகனின் கருத்து!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இதே உக்தியை கையாளுகிறாரா நடிகர் விஷால் என மக்களிடையே கேள்வி நிலவி வருகின்றது. காரணம் அவரது தொடர்சியான ட்விட்டர் பதிவுகள் தான்.


ஆர்.கே.நகர் இடைதேர்தல் விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஷால், தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன் செயல்பாடுகளை குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்.


ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து அதில் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.


தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாட்டால் வருத்தம் அடைந்த அவர் அதற்கான நியாத்தினை கோரி ஊடகத்தின் வாயிலாக அரப்போர் நிகழ்த்தி வருகின்றார். அவரது ட்விட்டர் பதிவுகள் அதற்கு சான்றாய் அமைந்துள்ளது!






நடிகர் கமலஹாசன் அவர்களை போல் இவரும் தனது கருத்தினை மக்களிடையே நேரடியாக கொண்டுச் செல்ல ட்விட்டரினை பயன்படுத்தி வருவது உலகநாயகனை விஷால் பின்தொடர்கிறாரா? என என்னவைத்துள்ளது!