அக்டோபர் 5 முதல் திரையை எட்டுகிறது `ராட்சசன்` திரைப்படம்!
விஷ்னு விஷால், அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ராட்சசன் திரைப்படம் வரும் அக்டோபர் 5-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!
விஷ்னு விஷால், அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ராட்சசன் திரைப்படம் வரும் அக்டோபர் 5-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!
முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமாருடன், நடிகர் விஷ்ணு மீண்டும் இணைந்துள்ள படம் ராட்சசன். காவல்துறை அதிகாரியாக விஷ்ணு நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்துள்ளார்.
சைக்கலாஜிக்கல் ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
'ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி - ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இத்திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.
இதனையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள "காதல் கடல் தானா" பாடலினை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலினை உமா தேவி எழுதியுள்ளார், சத்யபிரகாஷ் - சைத்ரா பாடியுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 5-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!