இளைஞர் ஒருவரை இரண்டு போலீசார் சாலையில் இழுத்துப் போட்டு கொடூரமாக தாக்கும் வீடியோ வைரளாகி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரை இரண்டு காவலர்கள் சாலையில் இழுத்துப் போட்டுத் தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். 


சித்தார்த் நகர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளரான வீரேந்திர மிஸ்ரா என்பவரும் தலைமைக் காவலர் மகேந்திர பிரசாத் என்பவரும் இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையுடன் வந்த ரிங்கு பாண்டே என்பரை நடுரோட்டில் கொடூரமாக தாக்கி, எட்டி உதைப்பதோடு தரக்குறைவாக பேசும் காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்ஃபோனில் பதிவு செய்துள்ளனர். ரிங்கு பாண்டேவுடன் வந்த சிறுவன் அச்சத்தில் உறைந்து நிற்க உடன் நிற்பவர்கள் கேட்டுக்கொண்டும் அவரை இரண்டு காவலர்களும் விடாமல் தாக்கியதாகக் கூறப்படுகிறது.



தாக்குதலுக்கான காரணம் என்ன என தெரியாவிட்டாலும் அவர்கள் ரிங்குவிடம் இருந்து வாகன சாவியை பறிக்க முயல்வதும் அதனை தர மறுக்கும் ரிங்கு தன்மேல் தவறு இருந்தால் தன்னை சிறையில் அடைக்குமாறு கூறுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ANI செய்திநிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சுமார் 2.07 நிமிட நீள வீடியோவில், அவரை இரண்டு காவல் அதிகாரிகளும் விடாமல் மாற்றி மாற்றி கொடுராமாக அடித்து உதைக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் விரலாக பரவியதை தொடர்ந்து. அந்த இஇரண்டு காவல்துறையினரையும் இடைநீக்கம் செய்துள்ளனர்.