காட்டுக்கு ராஜாவான சிங்கம் மிகவும் ஆபத்தான விலங்கு. அதன் வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தை கருத்தில் கொண்டே, இது காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிங்கம் முன்னால் தோன்றினால், காட்டு விலங்குகளே அஞ்சி ஓடும். அப்படி இருக்கும் போது, மனிதர்கள் முன்னால் தோன்றினால், நம் நிலை என்ன .. சிந்தித்து பார்த்தாலே பயமாக இருக்கிறது அல்லவா...


காட்டு விலங்குகளே அஞ்சும் சிங்கம் ஒன்று சாலையில் வந்தால் எப்படி இருக்கும். இது போன்ற ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளியில் காணப்படுகிறது. இந்த காணொளியில் ஒரு நபர் ஸ்கூட்டியில் பயணிக்கிறார், அப்போதுதான் காட்டில் சிங்கம் ஒன்று ஸ்கூட்டியின் முன் வீரு நடை போட்டுக் கொண்டு வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!


காட்டின் நடுவில் உள்ள சாலையில் ஸ்கூட்டி ஓட்டிச் செல்லும் நபர் திடீரென வாகனத்தை நிறுத்துவதைக் காணலாம். அவருக்கு முன்னால் ஒரு ஆபத்தான சிங்கம் வருகிறது. சிங்கம் அவருக்கு முன்னால் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென அங்கிருந்து வேறு பாதையில் செல்கிறது. இப்படியே சிங்கம் ஸ்கூட்டி ஓட்டுனரை தாக்காமல் அமைதியாக சென்று விடுகிறது. நல்ல வேளை சிங்கிளாக வந்த சிங்கம், தன்னை வேட்டையாடமல் விட்டுச் சென்றதை நினைத்து அந்த நபர் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்.


வைரலான வீடியோவை இங்கே பாருங்கள்:



சிங்கத்தின் இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ 276க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவிற்கு பயனர்களும் பல விதமான கருத்துக்களைபகிர்கின்றனர். 


மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!