சமூக ஊடக உலகில், எந்த வீடியோவை எப்போது பகிரப்படும் மற்றும் வைரலாகும் என்று சொல்வது கடினம். இதுபோன்ற வீடியோக்கள் சில சமயங்களில் வைரலாகி கண்களை ஈரமாக்கும் அல்லது சில சமயங்களில் அடக்க முடியாத அளவுக்கு சிரிப்பை ஏற்படுத்தும். தற்போது இதுபோன்ற வீடியோ ஒன்று பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மூன்று சிறுவர்களின் நடனத்துடன் தொடர்புடையது. ஆனால் நடனம் ஆடிக்கொண்டு இருக்கும் ஏற்பட்ட சம்பவம் யாரும் நினைத்து பார்த்து இருக்க முடியாது. அதேநேரத்தில் இந்த வைரல் வீடியோவை காணும் உங்களால் சிரிப்பை அடக்க முடியாது. இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏதாவது பண்டிகை, கல்யாணம் என்றால் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் உற்சாகமாக இருப்பார்கள். அந்த நேரத்தில் சிலர் செய்யும் காரியங்கள் நம்மை திரும்பி பார்க்க வைக்கும். "அடடே இப்படி ஆகி விட்டது" என பலர் கூற வைப்பது போலவும் சிலரின் செயல்கள் இருக்கும். வாருங்கள் அதேபோன்ற ஒரு வீடியோ குறித்து பார்ப்போம். 


ஒருசில நொடிகளில் வெளிவந்த வீடியோவில், மேடையில் இரண்டு சிறுவர்கள் நடனமாடுவதைக் காணலாம், அப்போது மற்றொரு சிறுவனும் அவர்களை நோக்கி மேடைக்கு செகிறான். இப்போது மூவரும் சேர்ந்து வேடிக்கை பார்ப்பவர்களை கவர வேண்டும் என்ற நோக்கில் தனித்துவமான நடனமாட முயற்சியில் ஈடுபடுகின்றனர். 


 



மேலும் படிக்க: 'ஓ சொல்றியா மாமா...' மாஸாக டான்ஸ் ஆடிய மணமகள், ஷாக் ஆன மணமகன்: வீடியோ


அதாவது ஒரு சிறுவனின் தோளின் மீது ஒரு  சிறுவன் அமர்ந்து கொள்கிறான். அவனின் கால்களை பிடித்து மூன்றாவது சிறுவன் தொங்கியப்படி வேகமாக சுற்றுகிறார்கள். அப்போதுதான் அவர்களின் சமநிலை தவறி கீழே பொத்து என்று விழுகிறார்கள். அதைபார்த்த அங்கிருந்தவர்கள் "இது தேவையா" என்ற மனநிலையில் சிரிக்கிறார்கள்.


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் மீம்ஸ்.பி.எஸ்.எஸ் என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது நடிகைக்கு ஏற்பட்ட தடங்கல்!