Snake Love Video: பின்னி பிணையும் பாம்புகள்; இது ஊடல் அல்ல... காதல் தான் என்கின்றனர் நெட்டிசன்கள்
இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்களுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம்.
பாம்பு காதல் வைரல் வீடியோ: இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதுவும் பாம்பு வீடியோக்களுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது என்லாம். சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பாம்பின் காதல் வீடியோ.
நீங்கள் திரைப்படங்களில் மலைப்பாம்பு அல்லது ராஜ நாகம் வேட்டையாடுவதை பார்த்திருக்கலாம். ஆனால், காதல் செய்து பார்த்ததுண்டா, காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமலா, விலங்குகளுக்கு சொந்தமானது தான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஓட்டல் ஒன்றின் நடைபாதையில் இரு பாம்புகள் காதல் வயப்பட்ட காட்சிகள் இணைய வாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளன.
இப்படியொரு காட்சியை படங்களில் கூட பார்த்திருக்க மாட்டார்கள். சுமார் ஒரு நிமிட வீடியோவில், ஹோட்டலில் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நாகப்பாம்பின் காதல் ஜோடி தாழ்வாரத்தில் பல அடி நீளத்தில் இருப்பதைக் காணலாம். மக்கள் இந்த பாம்பு காதல் ஜோடியைக் கடந்து செல்கிறார்கள், ஆனால் இதை அறியாமல், பரஸ்பரம் காதலில் மூழ்கி தொலைந்து போகிறார்கள். சமூக ஊடகங்களில் பலர் இவை காதலில் அழகாக நடமாடும் பாம்புகள் என ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பாம்புக்கு முரட்டுத்தனமா காதல் வந்தா என்ன ஆகும்? வீடியோ வைரல் ஆகும்!!
அந்த வழியாக செல்லும் ஒரு பெண், பாம்புகள் காதலிப்பதை பார்த்து அதிர்ச்சியடைவதை இந்த வீடியோவில் காணலாம். இருப்பினும், பின்னர் அந்த பெண் தானே அந்த அற்புதமான காட்சியை கேமராவில் பிடிக்கத் தொடங்குகிறாள். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
வைரலான வீடியோவை இங்கே காணலாம்:
பாம்புகள் காதல் செய்யும் இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறட்து. இதுவரை லட்சக்கணக்கான லைக்குகளையும் பார்வைகளையும் குவித்துள்ளது. @TheFigen என்ற ட்விட்டரிலும் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாம்பு காதல் செய்யும் வீடியோ உங்களையும் நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
மேலும் படிக்க | திடீரென அருகில் வந்த பாம்பு: சிறுமி செய்த வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ