கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கார் விபத்தில் இறந்து போய்விட்டதாக செய்திகள் பரவி வந்தது. தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உமர் அக்மல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக கலவரம் நடந்து வருகிறது. முதலில் போலீஸ் இந்த போராட்டத்தை அடக்க முயற்சி செய்தது. பின் ராணுவம் கொண்டு வரப்பட்டது. இந்த கலவரத்தில் 10க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


இந்த நிலையில் இந்த கலவரத்தில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் உமர் அக்மல் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியது. அங்கு நடந்த கலவரத்திற்கு ஆதரவாக உமர் சென்றதாகவும், அப்போது அவர் மரணம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அவர் காரில் இருக்கும் போது வேகமாக வந்த ராணுவ வாகனத்தில் மோதி மரணம் அடைந்துவிட்டதாக கூறப்பட்டது. 


இந்த மரணம் குறித்த செய்தி வெளியே வந்ததும் அது சோஷியல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. பாகிஸ்தானில் இருக்கும் பிரபலங்களை டிவிட்டரில் டேக் செய்து உமர் அக்மல் குறித்து பலரும் விசாரித்தனர். 


இதையடுத்து உமர் அக்மல் தனது டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ''நான் மிகவும் நலமாக இருக்கிறேன். எனக்கு எதுவுமே ஆகவில்லை. நான் மரணம் அடைந்ததாக சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி. பாகிஸ்தான் தேசிய டி-20 தொடரின் செமி பைனலுக்கு கண்டிப்பாக வருவேன்'' என்று கூறினார். இதன் மூலம் இரண்டு நாளாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.