நாய்கள் நன்றியுள்ள விலங்குகள். நாய்களை வளர்ப்பவர்கள் அவற்றை தங்கள் செல்லப் பிள்ளைகளைப் போல வளர்ப்பதை நாம் பார்த்துள்ளோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்பிப்பதைப் போலவே, நாய்களை வளர்ப்பவர்கள் தங்கள் நாய்களுக்கும் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள். 


தான் வளர்க்கும் நாய்கள் மீது அலாதியான அன்பையும் அக்கறையும் கொண்ட ஒரு பெண்ணின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. 


இதில் அந்த பெண் தன் செல்லப்பிராணிகளுக்கு (Pets) பிரார்த்தனை செய்ய கற்றுக்கொடுக்கிறார். இதைப் பார்த்தால் உங்கள் முகத்தில் புன்னகை பூக்காமல் இருக்க முடியாது. 


உணவுக்கு முன் பிரார்த்தனை செய்வது, கடவுள் நமக்கு செய்துள்ள உதவிகளுக்கு, அவரது ஆசீர்வாதங்களுக்கும் நன்றி செலுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த பாரம்பரியமாகும். அந்த நிமிடத்தில் உங்கள் வாழ்வின் நிலையைப் பற்றி சிந்தித்துப் பார்த்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி உங்கள் கவலைகளை அவர் முன் வைப்பதற்கும் பிரார்த்தனை உதவுகிறது. 


வைரல் ஆகியுள்ள இந்த வீடியோவை (Viral Video) ட்விட்டர் பயனர் வைஷாலி மாத்தூர் பகிர்ந்துள்ளார். "என் தோழி அவரது செல்லப் பிராணிகளுக்கு உணவுக்கு முன் பிரார்த்திக்க கற்றுக்கொடுக்கிறார். மனதை நெகிழ வைக்கும் இந்த விடியோவை நான் பகிர்கிறேன். இரண்டு செல்ல நாய்களும் மிகவும் நல்ல நாய்கள் என எனக்குத் தோன்றுகிறது" என்று அவர் எழுதியுள்ளார்.


வீடியோவில், ஒரு பெண் தரையில் அமர்ந்திருப்பதையும் அவரது இரு புறமும் இரு செல்ல நாய்கள் (Dog) அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது. கை கூப்பியபடி அந்த பெண் இரண்டு நாய்களையும் பார்க்கிறார். சுவற்றுக்கு அருகில் இரு கிண்ணங்களில் அவற்றின் உணவு வைக்கப்பட்டுள்ளது. நல்ல பிள்ளைகளாக நடந்துகொள்ளும் அந்த செல்லப்பிராணிகள் அந்த பெண் தனது பிரார்த்தனையை முடிக்கும் வரை பொறுமையாக காத்திருக்கின்றன. 



ALSO READ: அடிபட்ட நாயை தத்தெடுத்து அதற்காக Special Wheel Chair-ஐ உருவாக்கிய கோயம்பத்தூர் தந்தை மகள்


பிரார்த்தனையை முடித்துவிட்டு, உணவை எடுத்துக்கொள்ளுமாறு அந்த பெண் செய்கை செய்தவுடன் இரு நாய்களும் உணவிடம் பாய்ந்து செல்கின்றன. 


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு 24,000 க்கும் மேற்பட்ட வியூசும் 1,100 க்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. 


இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்த ஒரு பயனர், "இன்று உங்களைப் புன்னகை செய்ய வைக்க இது உதவும்" என்று எழுதியுள்ளார். 
மற்றொருவர், "Lol... அவற்றால் உணவுக்காக இதற்கு மேல் காக்க முடியாது" என்று கமெண்ட் செய்துள்ளார். 


மற்றொரு பயனர், "0:26 - இதுதான் மிகச் சிறந்த தருணம். அது கிட்டத்தட்ட பொறுமையை இழந்தது" என்று எழுதினார்.  இன்னொருவர் கருத்துத் தெரிவிக்கையில், "பெண்கள், தாய்மார்களின் கனிவான அன்பு கலந்த குணத்தால் நாய்கள் மட்டுமல்ல, மிருகங்கள், டைனோசர்கள், டிராகன்களுக்கு கூட எதையும் கற்பிக்க முடியும் !!" என்று எழுதியுள்ளார். 


ALSO READ: Watch: PPE கிட் அணிந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி, வைரலாகும் வீடியோ


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR