விநாயகர் பாடலை பாட அலெக்சாவிடம் அன்புக் கட்டளையிடும் பாட்டி; வீடியோ வைரல்
தோழனாக பணிபுரியும் அலெக்சாவிடம், கணபதி பாடலை பாட கேட்டுக் கொள்ளும் பாட்டியின் வீடியோ வைரலாகிறது
அமேசானின் அலெக்ஸா கருவியிடம் விநாயகர் பாடலை பாடுமாறு கேட்கும் பாட்டியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அலெக்சா வீட்டில் இருக்கும் அனைவருக்கும் உதவி செய்யும் பிரபலமான தொழில்நுட்பக் கருவியாகும்.
அலெக்சாவை குரலால் கட்டுப்படுத்த முடியும். அதை கேட்டுக் கொண்டால் பாடும், வானிலை மற்றும் போக்குவரத்து தகவல்களையும் அலெக்சா கொடுக்கும். அதுமட்டுமல்ல, அலெக்ஸா மூலம் கடிகாரத்தில் அலாரம் செட் செய்யலாம். வீட்டிலுள்ள ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம், மேலும் பலவற்றை செய்யலாம்.
இப்படி தோழனாக பணிபுரியும் அலெக்சாவிடம், கணபதி பாடலை பாட கேட்டுக் கொள்கிறார் பாட்டி. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அதையும் அந்தப் பாட்டி மிகவும் பவ்யமாக அழகாக கேட்பது பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, அலெக்சாவுக்கும் பிடித்திருக்கும் என்று ஒரு பயனர் சமூக ஊடகத்தில் பதிவிடுகிறார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டதிலிருந்து, இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 67,000 லைக்குகளுடன் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று பரவலாகிக் கொண்டிருக்கிறது இந்த பாட்டி-அலெக்சா வீடியோ.
Also Read | உயிரைப் பணயம் வைத்து ஓடும் ரயிலில் ஏற முயன்ற 71 வயது மூதாட்டி
இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவேற்றியிருக்கிறார் நேஹா சர்மா என்ற பயனர். ”பாட்டியும், அலெக்ஸாவும்’ என்ற தலைப்பில் இந்த வீடியோவை நேஹா ஷர்மா பகிர்ந்துள்ளார்.
தாத்தா பாட்டிகள் வீட்டில் இருந்தால் அது குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தும். வீட்டில் இயல்புநிலையை பராமரிப்பதில் வீட்டில் மூத்தவர்களின் இருப்பு வீட்டை வளப்படுத்தும். குழந்தைகள் இருப்பது வீட்டில் சிரிப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவது போலவே, பெரியவர்களின் இருப்பும் நிச்சயமாக நம்மை சிரிக்க வைக்கிறது.
அவர்கள் தங்கள் பாரம்பரிய முறையில் வாழ்க்கையை தொடந்தாலும், புதிய விஷயங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற உந்துதலுடன் செயல்படுபவர்களை இளைய தலைமுறையினர் எப்போதும் ஊக்கமளிக்கின்றனர்.
சமூக ஊடகங்களின் யுகம் உலகையே ஆக்ரமித்துள்ளதால், தாத்தா பாட்டிகளும் அதில் நுழைந்து தங்கள் வாழ்க்கையை மேலும் சுவையாக்கிக் கொள்கின்றனர். புதிய கால தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக தளங்களும் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Read Also | இறந்த 45 நிமிடத்திற்கு பின் ‘உயிர்த்தெழுந்த’ பெண்...
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR