ஒரு கையில் சிகெரெட்.. மறு கையில் பாம்பு; ரஜினி ஸ்டைலில் பாம்பை பிடிக்கும் பெண்.. !!
வைரல் வீடியோவில் காணப்படும் பெண் அச்சம் சிறிதும் இன்றி, சாலையில் ஊர்ந்து சென்ற பாம்பை பிடித்த விதம் இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாம்பை பிடிப்பது குழந்தை விளையாட்டு அல்ல. சில சமயங்களில் பாம்பு பிடிக்கும் கலையில் தேர்ந்தவர்களையும் பாம்பு கடித்து விடும் சம்பவங்களையும் நாம் அடிக்கடி கேள்விப்பட்டத்துண்டு. இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஆச்சர்யமும் அதிர்ச்சியையும் அளிக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், ஒரு பெண் விஷ பாம்பை அச்சம் சிறிதும் இன்றி அசால்டாக பிடிப்பதைக் காணலாம்.
இந்த வீடியோவில் குறிப்பிட்ட பெண் சாலையில் ஊர்ந்து சென்ற பாம்பை பிடித்து சாலையோரம் பிடித்து விட்ட விதம் உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது. இந்த வீடியோ பிரேசிலில் எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் பாம்புகளுக்கு சிறிதும் பயப்படாததை வீடியோவில் காணலாம்.
மேலும் படிக்க | அட்டாக் செய்ய வந்து அடங்கிப்போன மலைப்பாம்பு: மாஸ் காட்டிய சிறுத்தை
நடுரோட்டில் பாம்பு ஒன்று அமர்ந்திருப்பதை வீடியோவில் காணலாம். அந்த வழியாக செல்லும் மக்கள் பாம்பை கண்டு மிகவும் அச்சமடைந்து விலகி செல்வதையும் காணலாம். அப்போது அங்கு ஒரு பெண் வருகிறாள். முதலில், அவள் பாம்பை சில கணங்கள் வெறித்துப் பார்க்கிறாள். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்த பிறகு, அந்த பெண் ஸ்டைலாக பாம்பை தன் கைகளால் பிடித்து எரிவதை வீடியோவில் காணலாம்.
வீடியோவை இங்கே காணலாம்:
பெண்ணின் இந்த நடவடிக்கையை கண்டு அங்கிருந்தவர்கள் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | ‘என் அம்மா யாரு?’ குறும்புக்கார அம்மாவை தேடும் கியூட் குழந்தையின் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR