டேராடூன்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உத்தரகாண்டின் பனி மூடிய இமயமலைப் பகுதியில் 15,000 அடி உயரத்தில் இந்தோ-திபெத்திய எல்லைப்படை வீரர்கள் (ஐடிபிபி) பலர் யோகாசனம் பயிற்சி மேற்கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய திபெத்திய எல்லை படையான ITBP தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோவில் வரவிருக்கும் சர்வதேச யோகா 2022 தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளை மேற்கொள்வதைக் காணலாம். 


வீடியோவை இங்கே காணலாம்:



வியாழனன்று, ITBP விசாகப்பட்டினத்தில் உள்ள பீம்லி கடல் கடற்கரையில் யோகா செய்யும் ஐடிபிபி வீரர்களின் படங்களையும் பகிர்ந்து கொண்டது. மேலும் ஒரு நாள் முன்பு, லடாக்கில் 15,000 அடியில் நடத்தப்பட்ட இதேபோன்ற பயிற்சியின் படத்தையும் ITBP வெளியிட்டது.



மேலும் படிக்க | ITBP படையின் போர் நாய், தனது 13 குட்டிகளுக்கு பாலூட்டும் காட்சி: வைரல் வீடியோ


புதன்கிழமையன்று, பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் 6வது பட்டாலியன் படைப் பிரிவும்  இதுபோன்ற மற்றொரு பயிற்சியை மேற்கொண்டது.



2015 ஆம் ஆண்டு முதல், சர்வதேச யோகா தினம் 2014 ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபையில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


செப்டம்பர் 27, 2014 அன்று பொதுச் சபையின் உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச யோகா தினம் குறித்த யோசனை முதலில் முன்மொழிந்தார்.


மேலும் படிக்க WATCH: குறுகிய சுரங்கத்திலிருந்து ஒரு நபரை மீட்ட ITBP. வைரலாகும் வீடியோ..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR