சென்னை சூப்பர்கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் மகள், அந்த அணி வீரர் பிராவோவுக்கு தொப்பி அணிய கற்றுக்கொடுக்கும் வீடியோ.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது தொடர்ந்து நடைபெற்று வரும் போட்டிகளில் CSK கேப்டன் தோனியின் மகள் ஸீவா தோனி அழகிய நடனமாடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிராக ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் கடைசி ஓவரில் CSK த்ரில் வெற்றிபெற்றது.


தல தோணி காலத்திலும், களத்துக்கு வெளியேவும் தனது மகளுடன் செய்யும் க்யூட் விஷயங்கள் வைரலாவது வழக்கம். அதேபோல டெல்லி கேப்பிட்டல் அணியுடனான ஆட்டத்துக்கு பிறகு ஸிவாவுடன் ப்ராவோ மற்றும் தாஹிர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஸிவா ப்ராவோவுக்கு தொப்பியை எப்படி அணிய வேண்டும் என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 



CSK கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது. சுரேஷ் ரெய்னாவின் அபாரமாக ஆடி 58 ரன்கள் குவித்து அரைசதமடித்தார். அவர் 17 பந்தில் 31 ரன்கள் விளாசிய ஜடேஜாவுடன் இணைந்து 41 ரன் பார்ட்னர் ஷிப் அமைத்தார். இம்ரான் தாஹிர் அபாரமால பந்து வீசி 27 ரன்களை கொடுத்து கொல்கத்தாவின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.


2014க்கு பிறகு கொல்கத்தா அணி முதல் முறையாக ஹாட்ரிக் தோல்வியை சந்திக்கிறது.