விவசாய நிலத்தில் சாலை அமைப்பதை கண்டித்த இரு சகோதரிகளை அடித்து கட்டி இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரளாக பரவி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்குவங்க மாநிலத்தில் தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பதை கண்டித்த பள்ளி ஆசிரியை உள்ளிட்ட சகோதரிகள் இருவரை, ஊராட்சிமன்ற தலைவரால் அடித்து துன்புறுத்தி கட்டி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படா நகர் பகுதியில் 12 அடி சாலை அமைக்க முடிவு செய்து அதற்காக நிலம் கையகப்படுத்தும் செயலில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சாலைக்கு மக்களும் முழு சம்மதம் தெரிவித்து சாலைக்கு தேவையான நிலத்தை வழங்கியுள்ளனர்.


இந்நிலையில் திரிணாமுல் காங்., கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்கார், அந்த சாலையை வேண்டுமென்றே 24 அடியாக மாற்ற உத்தரவிட்டு அதற்கான வேலையை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியையான ஸ்மிர்திகொன் தாஸ் மற்றும் அவரது சகோதரி சோமாதாஸ் போராட்டம் நடத்தினர்.



இது குறித்து அப்பகுதி மக்கள் இருவரிடமும் கேட்டதற்கு, 12 அடி சாலைக்கு நிலம் வழங்க சம்மதம் தெரிவித்த நிலையில் பஞ்., தலைவர் அமல் சர்க்கார், வேண்டுமென்றே 24 அடியாக மாற்றி தங்கள் நிலத்தை அபகரித்ததாக புகார் கூறினர். இதனை கண்டித்த மக்கள் இருவர் மீதும் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில், அமல் முன்னிலையில், அங்குள்ளவர்கள் இருவரின் கை, கால்களை கயிற்றால் கட்டி சாலையில் இழுத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இச்சம்பவத்தை தொடர்ந்து அமல் சர்க்கார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.